Cooking Easy Hacks: சமையலறையில் வேலை சுலபமாக இருக்க வேண்டுமா..? எளிதான ரகசிய குறிப்புகள்!
Quick Cooking Tips and Tricks: சமையலை எளிதாக்க பல நடைமுறை குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. வெங்காயம் வெட்டும் போது கண்களில் நீர் வராமல் தடுப்பது, பால் பொங்காமல் தடுப்பது, எலுமிச்சை சாறு அதிகம் எடுப்பது, காய்கறிகளை விரைவாக வேக வைப்பது, எண்ணெயில் நுரை வருவதை தடுப்பது, பூண்டு சட்னி நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும்.

இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் வேலை எளிதாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக மக்கள் யூடியூப் சென்று தேடி பார்க்கிறார்கள். இது சமையலறைக்கும் (Kitchen) விதிவிலக்கல்ல. நவீன வாழ்க்கை முறையில் சமையலை மிக எளிதாக செய்ய வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் (Ladies) நினைக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு வேலை எளிமையாகவும், விரைவாகவும் முடியும். நீங்களும் அப்படி நினைக்கும் ஒருவராக இருந்தால், அன்றாட வாழ்க்கையில் இந்த விஷயங்களை பின்பற்றுங்கள். இது பெரிய உதவியாக இருக்கும்.
வெங்காயம் வெட்டினால் தண்ணீர் வருகிறதா..?
தினமும் சமைக்கும்போதும் வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் இருக்காது. ஆனால், வெங்காயம் வெட்டும்போது பலருக்கும் கண்களில் இருந்து தண்ணீர் வடியும். உங்கள் கண்களில் இருந்து தண்ணீர் வரக்கூடாது என்றால் வெங்காயத்தை 10 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைக்கலாம், அப்படி இல்லையென்றால், வெங்காயத்தை வெட்டுவதற்கு முன் தண்ணீரில் ஊற வைக்கலாம். இது வெங்காயத்தில் இருந்து வெளியேறும் இராசயனத்தை குறைத்து, கண்களில் எரிச்சல் வராமல் தடுக்கும்.
ALSO READ: வெங்காயம் விரைவில் கெட்டுவிடுகிறதா? கெடாமல் வைக்க இந்த முறையில் டிரை பண்ணுங்க!




கொதிக்கும்போது பால் வெளியே வருகிறதா..?
பால் கொதிக்கும்போது, அது பெரும்பாலும் பாத்திரத்தில் இருந்து பொங்கி வழிந்து வெளியே வரும். இதை தவிர்க்க, பாத்திரத்தின் மீது கரண்டியை வைக்கலாம், இது பால் வெளியே சிந்துவதை தடுக்கும்.
எலுமிச்சை பிழித்தல்:
எலுமிச்சை பிழியும்போது சாறு குறைவாக இருந்தால், இதை வெட்டுவதற்கு முன் சிறிது சூடாக்கலாம். உங்கள் வீட்டில் மைக்ரோவேவ் இருந்தால் 10 வினாடிகள் அதில் வைக்கலாம். இது அதிக சாறு தரும்.
காய்கறிகளை விரைவாக வேகவைக்க வேண்டுமா..?
சமைக்கும்போது காய்கறிகளை வேக வைக்கும்போது, சிறிது உப்பு சேர்த்து மூடியை திறந்து வைக்கலாம். இது காய்கறிகளை விரைவாக வேகவைப்பது மட்டுமின்றி, அவற்றின் நிறத்தையும் அப்படியே வைத்திருக்கும்.
எண்ணெயில் நுரை பொங்குதல்:
சமைக்கும்போது சில நேரங்களில் எண்ணெயில் நுரை வர ஆரம்பிக்கும். இதை தவிர்க்க, எண்ணெயை சூடாக்கும்போது, அதில் சிறிதளவு உப்பு சேர்க்கலாம். இது நுரை வருவதை தடுக்கும். மேலும், எண்ணெயை மீண்டும் மீண்டும் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
பூண்டு சட்னி:
நீங்கள் பூண்டு சட்னி செய்ய போகிறீர்கள் என்றால், சட்னி செய்ய பூண்டை நசுக்கும்போது, அதை நெய்யுடன் சேர்த்து வதக்கலாம். இதனுடன், எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இது சட்னியின் சுவையை இரட்டிப்பாக்குவது மட்டுமின்றி, நீண்ட நேரம் கெட்டுபோகாமல் தடுக்கும்.
ALSO READ: வெறும் 15 நிமிடங்களில் சூப்பர் டிஷ்! முந்திரி-பாதாம் ஊறுகாய் ரெசிபி தெரியுமா..?
நெய் பாதுகாப்பு:
நெய்யை பயன்படுத்தினால், சில நேரங்களில் அது விசித்திரமான வாசனையை தொடங்கும். நெய்யை நீண்ட நேரம் மணமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க, அதில் ஒரு துண்டு வெல்லம் மற்றும் ஒரு துண்டு கல் உப்பு சேர்க்கலாம். நெய் முற்றிலும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.