Food Recipe: வெறும் 15 நிமிடங்களில் சூப்பர் டிஷ்! முந்திரி-பாதாம் ஊறுகாய் ரெசிபி தெரியுமா..?
Cashew-Almond Pickle Recipe: முந்திரி, பாதாம், உப்பு, மசாலா பொருட்கள், சர்க்கரை, எலுமிச்சை சாறு. சர்க்கரை பாகு செய்து, அதில் முந்திரி, பாதாம் சேர்த்து வேகவைத்து, மசாலா பொருட்களுடன் கலந்து, ஆறவிட்டு, எலுமிச்சை சாறு சேர்க்கவும். இனிப்பு, புளிப்பு கலந்த சுவையான முந்திரி பாதாம் ஊறுகாய் தயார்.

ஊறுகாய் (Pickle) என்றால் பலருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்தியாவில் பலருக்கும் ஊறுகாய் மற்றும் அப்பளம் இல்லாமல் சாப்பாடு உள்ளே இறங்காது. ஒவ்வொரு வீட்டிலும், பருவத்திற்கு ஏற்ப சில பழங்கள், காய்கறிகளிலிருந்து ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு கோடைக்காலத்தில் (Summer) மாங்காயில் இருந்து ஊறுகாயும், குளிர்காலத்தில் மிளகாயில் இருந்தும் ஊறுகாய் செய்யப்படுகிறது. நீங்கள் பல வகையான ஊறுகாய்களை சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் நீங்கள் எப்போதாவது முந்திரி-பாதாம் (Cashew-Almond) மூலம் செய்யப்படும் ஊறுகாயை டேஸ்ட் பண்ணி இருக்கீங்களா..? இல்லையென்றால், இந்த செய்முறையைப் பயன்படுத்தி வீட்டிலேயே முந்திரி-பாதாம் ஊறுகாயை ஒரு முறை செய்யுங்கள். நிச்சயமாக அதன் சுவை உங்களுக்குப் பிடிக்கும்.
ALSO READ: சிக்கன் பன்னீர் கிலாஃபி கட்லெட்: காரசாரமான சுவையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ்!




முந்திரி-பாதாம் ஊறுகாய்:
தேவையான பொருட்கள்
- முந்திரி – 1 கப்
- பாதாம் – 1 கப்
- உப்பு – 1 ஸ்பூன்
- பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
- காஷ்மீர் சிவப்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- உலர்ந்த மாங்காய் தூள் – 2 ஸ்பூன்
- சர்க்கரை – 250 கிராம்
- ஏலக்காய் – 4
- எலுமிச்சை சாறு அல்லது வினிகர் – 1 ஸ்பூன்
ALSO READ: வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!
முந்திரி-பாதாம் ஊறுகாய் செய்வது எப்படி..?
- முதலில் அடுப்பை ஆன் செய்து ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும் 1 கப் தண்ணீருடன் சர்க்கரையைச் சேர்த்து கலக்கவும். இப்போது சர்க்கரை கரைசலில் சிறிதளவு ஏலக்காய்த் தூளை சேர்க்கவும். சர்க்கரை கொதிக்கும் வரை சமைக்கவும். சர்க்கரை தீயாத அளவில் பார்த்து கொள்ளுங்கள். தொடர்ந்து, கிளறிக்கொண்டே இருங்கள்.
- அப்போது, மேலே இருந்து வெள்ளை நுரை வர ஆரம்பித்ததும், அதில் முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளைச் சேர்க்கவும். இப்போது இரண்டையும் கொதிக்கும் வரை நன்றாக கிளறவும்.
- அடுத்த கட்டமாக, உலர்ந்த மாங்காய் தூள், உப்பு, பெருஞ்சீரகம் போன்ற அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து கலக்க வேண்டும். மசாலாப் பொருட்களைச் சேர்த்த பிறகு, 5 நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- இந்த நேரத்தின்போது, கேஸ் அடுப்பின் தீயை வைப்பது நல்லது. அப்போதுதான், குறைந்த தீயில் முந்திரி மற்றும் பாதாம் நன்றாக வேகும். இவை, அனைத்தும் சற்று கெட்டியாகும்போது, அடுப்பை அணைக்கவும். இப்போது ஊறுகாயை சுமார் 5 நிமிடங்கள் காற்றில் ஆற விடவும்.
- ஊறுகாய் ஆறியதும், அதனுடன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான், இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடன் முந்திரி-பாதாம் ஊறுகாய் தயார்.
- நீங்கள் இதை எந்த உணவுடன் சுவைக்கலாம். தயிர் சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்டவைகளுடன் இந்த முந்திரி-பாதாம் ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருக்கும்.