Food Recipe: சிக்கனும், மட்டனும் வேண்டாம்..! கொண்டைக்கடலை பிரியாணி ரெசிபி தெரியுமா..? ஹைதராபாத் ஸ்டைலில் அசத்தும்!
Hyderabad Kabuli Biryani: ஹைதராபாத் காபூலி பிரியாணி, சாதாரண பிரியாணியிலிருந்து மாறுபட்ட சுவையுடன் கூடிய ருசியான உணவு. முன்தினம் ஊறவைத்த கொண்டைக்கடலை மற்றும் பாஸ்மதி அரிசியைப் பயன்படுத்தி, வெங்காயம், தக்காளி, மசாலாப் பொருட்களுடன் சேர்த்து குக்கரில் அல்லது பாத்திரத்தில் வேகவைத்து தயாரிக்கலாம்.

சிக்கன் (Chicken) பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன் பிரியாணி என பலரும் பல வகையான பிரியாணிகளை சுவைத்து இருப்பார்கள். இருப்பினும், இன்னும் ஏதேனும் பிரியாணியை சுவைக்க வேண்டும் என்று அவர்களது பட்டியல் முழுமையடையாமல் இருக்கும். நம் இந்தியர்கள் இயல்பிலேயே உணவு பிரியர்கள். இந்தியாவில் எல்லா இடங்களிலும் பிரியாணி (Biryani) கிடைக்கிறது. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் பிரியாணி வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இவைகளின் சுவையும் வேறுபட்டவை. ஆனால், அது எந்த வகை பிரியாணியாக இருந்தாலும், நாம் சாப்பிட உட்கார்ந்தால் அதிகமாக சுவைப்போம். அதன்படி, இன்று வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை (Chickpea) பிரியாணியை செய்யலாம். இதை ஹைதராபாத் காபூலி பிரியாணி என்று அழைப்பார்கள்.
ALSO READ: சிக்கன், மட்டனை விடுங்க..! முருங்கைக்காய் பிரியாணி ரெசிபி தெரியுமா? சுவை அசத்தும்..!




ஹைதராபாத் காபூலி பிரியாணி:
தேவையான பொருட்கள்:
- பாஸ்மதி அரிசி – 1 கிலோ
- கொண்டைக்கடலை – 100 கிராம்
- வெங்காயம் – 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
- தக்காளி- 1/2 கிலோ
- தயிர் – 200 கிராம்
- கரம் மசாலா – 70 கிராம்
- சிவப்பு மிளகாய் தூள் – 20 கிராம்
- கொத்தமல்லி இலைகள் – ஒரு கையளவு
- பச்சை மிளகாய் – 30 கிராம்
- நெய் – சிறிதளவு
- சமையல் எண்ணெய் – தேவையான அளவு
ALSO READ: வீட்டிலேயே மொறுமொறுப்பா ஏதாச்சும் சாப்பிடணுமா..? பார்பிக்யூ சிக்கன் ரெசிபி இதோ!
ஹைதராபாத் காபூலி பிரியாணி செய்வது எப்படி..?
- ஹைதராபாத் காபூலி பிரியாணி செய்ய, முதலில் அரிசியை தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும். அதேபோல், கொண்டைக்கடலையையும் ஒரு இரவுக்கு முன்பே நன்றாக ஊறவைத்து கொள்ளவும்.
- அதன்பின்னர், நீள வாக்கில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி போன்றவற்றை வெட்டி கொள்ளவும். அரை கிலோ தக்காளி எடுத்துக்கொண்டால், 30 கிராம் பச்சை மிளகாய் போதுமானது.
- இப்போது, ஒரு குக்கரில் எண்ணெயை வைத்து சூடாக்கவும், எண்ணெய் சூடாக தொடங்கியதும் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
- இவை அனைத்தும் பொன்னிறமாக மாற தொடங்கியதும், 200 கிராம் தயிர், கொத்தமல்லி, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, கலந்து, குறைந்த தீயில் நன்கு வதக்கவும். இதனுடன், இரவு முழுவதும் ஊறவைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவும்.
- தொடர்ந்து, ஊறவைத்த அரிசியை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீரை சேர்த்து குக்கரை மூடவும். நீங்களில் குக்கரில் இல்லாமல் பாத்திரத்தில் செய்கிறீர்கள் என்றால், அரிசி கொதித்தது, தண்ணீரை பிரித்து, வடிகட்டி மசாலா பொருட்கள் உள்ள பாத்திரத்தில் போட்டு, குறைந்த தீயில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- அவ்வளவுதான்,ஹைதராபாத் காபூலி பிரியாணி ரெடி.