AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Food Recipe: சிக்கன், மட்டனை விடுங்க..! முருங்கைக்காய் பிரியாணி ரெசிபி தெரியுமா? சுவை அசத்தும்..!

Drumstick Biryani: கோடை காலத்திலோ அல்லது பருவநிலை மாற்றத்திலோ அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில், சுவையான முருங்கைக்காய் பிரியாணி ஒரு சிறந்த மாற்று. இது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், அனைவருக்கும் பிடிக்கும் சுவையையும் கொண்டுள்ளது. இந்த செய்முறையில், பாஸ்மதி அரிசி, முருங்கைக்காய், மற்றும் பிற மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. எளிதான செய்முறையுடன், சுவையான முருங்கைக்காய் பிரியாணியை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

Food Recipe: சிக்கன், மட்டனை விடுங்க..! முருங்கைக்காய் பிரியாணி ரெசிபி தெரியுமா? சுவை அசத்தும்..!
முருங்கைக்காய் பிரியாணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 28 Jun 2025 22:09 PM IST

கோடைக்காலமாக (Summer) இருந்தாலும் சரி, அதன்பிறகு ஏற்படும் பருவ நிலை மாற்றமாக இருந்தாலும் சரி, சிக்கன் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது உடல்நலத்திற்கு பிரச்சனையை தரும். இப்படியான பருவ காலத்தின்போது அசைவ உணவுகளை எடுத்துகொள்வது உடலில் வெப்பநிலையை அதிகரிக்கும். சுவையான உணவுகளை விரும்புவது இயற்கையான ஒன்றுதான். இப்படியான சூழ்நிலையில், பிரியாணி சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், நீங்கள் வெஜ் பிரியாணி (Veg Briyani) செய்து சாப்பிடலாம். அதேநேரத்தில், நீங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட விரும்பினால், முருங்கைக்காய் (Drumstick) பிரியாணியை செய்டு அசத்தலாம். இது உங்களுக்கு ஒரு புதிய சுவையை தருவதுடன், உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது. முருங்கைக்காய் பலருக்கு பிடிக்கும் என்பதால், அதன்மூலம் செய்யப்படும் பிரியாணியும் அனைவருக்கும் நிச்சயமாக பிடிக்கும்.

முருங்கைக்காய் பிரியாணி சிக்கன் மற்றும் மட்டனால் செய்யப்படும் பிரியாணியின் சுவைக்கு ஈடு கொடுக்கும். சைவ உணவு உண்பவர்கள் கூட இந்த பிரியாணியின் சுவையை விரும்புவார்கள். அதன்படி, முருங்கைக்காய் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் அதன் செய்முறையை இங்கே தெரிந்துகொள்வோம்.

முருங்கைக்காய் பிரியாணி

தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி – 400 கிராம்
  • முருங்கைக்காய் – 2
  • பிரியாணி இலைகள் – 4
  • ஏலக்காய் – 4
  • வெங்காயம் – 4
  • தக்காளி – 3
  • புதினா – சிறிதளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 6
  • பச்சை பட்டாணி 1/2 கப்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
  • பிரியாணி மசாலா – 1/2 டேபிள்ஸ்பூன்
  • கஸ்தூரி மேத்தி – 1 டேபிள்ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – சிறிதளவு

முருங்கைக்காய் பிரியாணி செய்வது எப்படி..?

  1. முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், வெங்காயம், கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
  2. இதனுடன் புதினா, கொத்தமல்லி இலை, கஸ்தூரி மேத்தி ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். இப்போது தக்காளி, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
  3. 3 முதல் 4 நிமிடங்கள் நன்றாக வதக்கிய பிறகு, முருங்கைக்காய் மற்றும் பட்டாணி ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர் பிரியாணி பொடியை சேர்த்து நன்கு கலக்கவும். பச்சை வாசனை போனவுடன் உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்.
  4. பின்னர், கழுவி வைத்த அரிசியை சேர்த்து அரிசி மூழ்கியபடி இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். தண்ணீர் கொதித்ததும், பாத்திரத்தை மூடி அரை மணிநேரம் சமைக்கவும்,
  5. இதையே குக்கரில் சமைத்தால், இந்த முறையை பின்பற்றி 2 விசில் வரும்வரை காத்திருக்கவும். அவ்வளவுதான், உங்களுக்கு ஒரு சுவையான முருங்கைக்காய் பிரியாணி ரெடி.

Follow Us