Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: வீட்டிலேயே கோபி பிரைட் ரைஸ் செய்வது எப்படி..? இப்படிச் செய்தால் சுவை அற்புதம்!

Gobi Fried Rice Recipe: சுவையான கோபி பிரைடு ரைஸை எளிதாக வீட்டில் செய்வது எப்படி என்பதை படிப்படியான வழிமுறைகளுடன் விளக்குகிறோம். தேவையான பொருட்கள், சமைக்கும் முறை மற்றும் சில குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. பாஸ்மதி அரிசி, காலிஃபிளவர், கரம் மசாலா மற்றும் பிற மசாலாப் பொருட்கள் மூலம் சுவையான கோபி பிரைடு ரைஸை உருவாக்கலாம். இந்த செய்முறையைப் பின்பற்றி, உங்கள் குடும்பத்தினருடன் சுவையான கோபி பிரைடு ரைஸை அனுபவிக்கலாம்.

Food Recipe: வீட்டிலேயே கோபி பிரைட் ரைஸ் செய்வது எப்படி..? இப்படிச் செய்தால் சுவை அற்புதம்!
கோபி பிரைட் ரைஸ்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Jun 2025 22:07 PM IST

இன்றைய நவீன வாழ்க்கையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாலையோர கடைகளுக்கு சென்று வித்தியாசமான உணவுகளை வாங்கி சாப்பிட விரும்புகிறார்கள். அதன்படி, தங்களுக்கு பிடித்த உணவுகள் அது பானி பூரி (Pani Puri), கோபி மஞ்சூரி, முட்டை சாதம், போண்டா, நூடுல்ஸ் போன்ற எந்த வகை உணவுகளாக இருந்தாலும் சரி. இதில் கோபி பிரைட் ரைஸூம் (Gobi Fried Rice) ஒன்று. சிக்கன் பிரட் ரைஸை போன்று அனைவரும் கோபி பிரைட் ரைஸூம் பிடிக்கும். இது மிகவும் சுவையாகவும் இருக்கும். மேலும், இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். அதன்படி, சுவையான கோபி ரைஸை எப்படி செய்வது? இதற்கு தேவையான பொருட்கள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

கோபி ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி – 1 கப்
  • காலிஃபிளவர் – 1 கப்
  • கரம் மசாலா – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • சிவப்பு மிளகாய் சாஸ் – சிறிதளவு
  • தக்காளி சாஸ் – சிறிதளவு
  • சோயா சாஸ் – சிறிதளவு
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • மிளகு தூள் – 1 ஸ்பூன்
  • சோள மாவு – 1 ஸ்பூன்
  • மைதா மாவு – 1 ஸ்பூன்
  • இஞ்சி – பொடி பொடியாக நறுக்கியது
  • பூண்டு – பொடி பொடியாக நறுக்கியது
  • பச்சை மிளகாய் – 2
  • வெங்காயம் – 1
  • கேப்சிகம் – 1 ஸ்பூன்
  • முட்டைக்கோஸ் – ஒரு கை அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

கோபி ஃபிரைடு ரைஸ் செய்வது எப்படி?

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சோள மாவு மற்றும் மைதா மாவைப் போட்டு, பின்னர் கரம் மசாலா, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  2. காலிஃபிளவரை வெட்டி, வெந்நீரில் கொதிக்க வைத்து பாத்திரத்தில் போடவும்.
  3. வெந்த காலிஃப்ளவரை மாவில் நன்றாக கலக்கவும். பின்னர் காலிஃப்ளவரை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  4. கேஸ் அடுப்பை ஆன் செய்து பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவுடன் கலந்து வைத்திருக்கும் அனைத்து காலிஃப்ளவரையும் வறுத்து தனியாக வைக்கவும்.
  5. இப்போது மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி, வெங்காயம், கேப்சிகம், முட்டைக்கோஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  6. அடுத்ததாக, சிவப்பு மிளகாய் சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கலந்தபின் வறுத்த காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும்.
  7. ஒரு நிமிடம் கழித்து, முன்பு வேகவைத்த அரிசியைச் சேர்த்து வதக்கவும். அதனுடன், கரம் மசாலா மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கினால், கோபி ஃப்ரைட் ரைஸ் தயாராக உள்ளது. அதில் ஒரு எலுமிச்சையை பிழிந்து சாப்பிட்டால், சுவை தாறுமாறாக இருக்கும்.