AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Food Recipe: சுவையில் தாறுமாறு தக்காளி பிரியாணி.. எளிதாக எப்படி செய்து அசத்துவது..?

Tomato Biryani Recipe: இந்த செய்முறையில், குறைந்த பொருட்களை பயன்படுத்தி சுவையான தக்காளி பிரியாணியை எப்படி செய்வது என்பதை விளக்குகிறோம். பாஸ்மதி அரிசி, தக்காளி, வெங்காயம் போன்ற அடிப்படை பொருட்களை கொண்டு சிறிது நேரத்தில் தயார் செய்யலாம். சர்க்கரை சேர்த்து புதுவிதமான சுவையை பெறலாம். தேங்காய் பால் அல்லது தண்ணீர் சேர்க்கலாம். ரைத்தாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Food Recipe: சுவையில் தாறுமாறு தக்காளி பிரியாணி.. எளிதாக எப்படி செய்து அசத்துவது..?
தக்காளி பிரியாணிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Jun 2025 17:36 PM IST

பிரியாணியில் (Biryani) எத்தனை வகைகள் இருக்கு என்று எண்ணுவதற்குள் தலை சுத்திவிடும். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஸ் பிரியாணி, காளான் பிரியாணி உள்ளிட்ட பலவகை உள்ளது. ஆனால், தக்காளி பிரியாணி (Tomato Biryani) பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா..? வெறும் தக்காளியை வைத்து சுவையான பிரியாணி செய்யலாம். இதை நார்மல் பிரியாணியாக மட்டும் இல்லாமல், இதை செய்ய நிறைய பொருட்கள் தேவையும் இல்லை. இது போன்ற பிரியாணிகள் செய்ய வெறும் வெங்காயமும், தக்காளியும் மட்டும் போதுமானது. இதை நான் வெஜ் பிரியாணியும் அல்ல, வெஜ் பிரியாணியும் அல்ல. ஆனால், இதன் சுவை மிகவும் சுவையாக இருக்கும், ஒரு முறை செய்துகொடுத்தால் அதன் சுவை மீண்டும் மீண்டும் கேட்கும்.

தக்காளி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

  • தக்காளி – 4
  • பாஸ்மதி அரிசி – 2 கப்
  • வெங்காயம் – 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • எண்ணெய் அல்லது நெய் – 4 டேபிள்ஸ்பூன்
  • இலவங்கப்பேட்டை – சிறிய துண்டு
  • ஏலக்காய் – 3
  • மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
  • மஞ்சள்தூள் – சிறிதளவு
  • கரம் மசாலா – 1 டேபிள்ஸ்பூன்
  • சர்க்கரை – அரை டேபிள்ஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் – அரை டேபிள்ஸ்பூன்
  • புதினா இலைகள்- சிறிதளவு
  • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

தக்காளி பிரியாணி செய்வது எப்படி..?

  1. முதலில் 2 கப் அளவிலான பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
  2. அதன்பிறகு, ஒரு குக்கரில் எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கவும். இதில் இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து பிரட்டவும். அப்போது அதன் மணம் அர ஆரம்பிக்கும்.
  3. மணம் நன்றாக வர தொடங்கியதும் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். அடுத்ததாக, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. தொடர்ந்து, இஞ்சி – பூண்டு விழுதின் பச்சை வாசனை போனவுடன் மிளகாய் தூள், சர்க்கரை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இது பிரியாணிக்கு புதுவிதமான சுவையை தரும். உங்களுக்கு சர்க்கரை வேண்டாம் என்றால், நீங்கள் அதை தவிர்க்கலாம்.
  5. இதன்பிறகு, நறுக்கிய தக்காளியை சேர்த்து கொதிக்க விடவும். தக்காளி நன்றாக மசிந்ததும், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். இட்வை அனைத்தையும் நிமிடம் கலக்கவும்.
  6. இப்போது கழுவிய அரிசியை சேர்க்கவும். அதில், ஒரு கப் தேங்காய் பால் சேர்க்கவும். தேங்காய் பால் சேர்க்க விருப்பம் இல்லையென்றால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். தேங்காய் பால் சேர்த்தால், பிரியாணிக்கு நல்ல சுவையை தரும்.
  7. அடுத்ததாக எல்லாவற்றையும் கலந்து, குக்கரை மூடி 2 விசில் விடவும். விசி அடங்கியதும் திறந்தால் சுவையான தக்காளி பிரியாணி தயார். இதை ரைத்தா மற்றும் கிரேவியுடன் சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.
Follow Us