Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: வீட்டிலேயே மொறுமொறுப்பா ஏதாச்சும் சாப்பிடணுமா..? பார்பிக்யூ சிக்கன் ரெசிபி இதோ!

BBQ Chicken Recipe: இந்தக் கட்டுரை எளிதாகச் செய்யக்கூடிய இரண்டு சிக்கன் பார்பிக்யூ ரெசிபிகளை வழங்குகிறது. முதலாவது, பாரம்பரிய பார்பிக்யூ சிக்கன், இரண்டாவது, சுவையான சாக்லேட் பார்பிக்யூ சிக்கன் விங்ஸ். தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கங்களுடன், படிகள் படிப்படியாக விவரிக்கப்பட்டுள்ளன.

Food Recipe: வீட்டிலேயே மொறுமொறுப்பா ஏதாச்சும் சாப்பிடணுமா..? பார்பிக்யூ சிக்கன் ரெசிபி இதோ!
பார்பிக்யூ சிக்கன்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jul 2025 13:59 PM

அசைவ உணவு உண்பவர்களுக்கு பெரும்பாலும் சிக்கன் (Chicken) மற்றும் மட்டன் பிடிக்கும். ஆனால், சில நேரங்களில் ஒரே வகையான சிக்கன் மற்றும் மட்டன் ரெசிபிகளை செய்வது சலிப்பை கொடுக்கும். மேலும், புதிதாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இன்று நாம் செய்யக்கூடிய ரெசிபி அதிக சிரமமில்லாதது மற்றும் எளிதாக செய்ய முடியும். அதன்படி, பார்பிக்யூ சிக்கன் (BBQ chicken) சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இன்று நாங்கள் உங்களுக்காக பார்பிக்யூ சிக்கன் மற்றும் சாக்லேட் பார்பிக்யூ சிக்கன் விங்ஸ் (Chocolate BBQ chicken wings) ரெசிபியைக் கொண்டு வந்துள்ளோம்…

ALSO READ: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மீன் வறுவல்.. வீட்டிலேயே சூப்பரா இப்படி செய்து பாருங்க..!

சாக்லேட் பார்பிக்யூ சிக்கன் விங்ஸ்:

தேவையாக பொருட்கள்..

  • சிக்கன் விங்ஸ்- 8
  • அரிசி மாவு- அரை கப்
  • வினிகர்- 2 தேக்கரண்டி
  • சாஸ்- 1 தேக்கரண்டி
  • தேன்- 2 தேக்கரண்டி
  • முட்டை- 1
  • டார்க் சாக்லேட்- 1 1/2 கப் (நறுக்கியது)
  • பிரவுன் சர்க்கரை- 1/3 கப்
  • வெங்காயத் தூள்- 1 தேக்கரண்டி
  • பூண்டுத் தூள்- 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லித் தூள்- 1/2 தேக்கரண்டி
  • கருப்பு மிளகுத் தூள்- 1 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி
  • கோகோ தூள்- 2 தேக்கரண்டி
  • தக்காளி கெட்ச்அப்- 1 1/2 கப்
  • கருப்பு மிளகு- 1 தேக்கரண்டி
  • உப்பு- சுவைக்கேற்ப
  •  எண்ணெய்- தேவைக்கேற்ப

சாக்லேட் பார்பிக்யூ சிக்கன் விங்ஸ் செய்யும் முறை:

  1. சாக்லேட் பார்பிக்யூ சிக்கன் விங்ஸ் செய்ய, முதலில் சிக்கனை எடுத்து அதில் வெங்காயம், பூண்டு, கருப்பு மிளகு தூள் சேர்க்கவும். இதனுடன்உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
  2. தொடர்ந்து, சிக்கனுடன் அரிசி மாவு மற்றும் முட்டையை சேர்த்து நன்றாக கலக்கவும். இதன் பிறகு 2 முதல் 3 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
  3. அடுத்ததாக, ஒரு பாத்திரத்தை கேஸில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். சூடானதும் சிக்கன் விங்ஸை வறுக்கவும்.
  4. சிக்கன் மொறுமொறுப்பாக வென்றதும், அதை வெளியே எடுக்கவும்.
  5. சாக்லேட் சாஸ் தயாரிக்க, மீதமுள்ள அனைத்து மசாலா மற்றும் சாக்லேட்டையும் சேர்க்கவும்.
  6. இதன் பிறகு அது கெட்டியாகும் வரை சூடாக்கி, இதில் சிக்கனை சேர்க்கவும். அவ்வளவுதான் சாக்லேட் சிக்கன் விங்ஸ் தயார்.

ALSO READ: ஈவ்னிங் ஸ்நாக்ஸுக்கு சூப்பர் டிஸ்.. காரசாரமான இறால் டிக்கா ரெசிபி இதோ..!

பார்பிக்யூ சிக்கன்:

பார்பிக்யூ சிக்கன் செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றவும். இதில், சாக்லேட், தேன் மற்றும் கோகோ பவுடர் சேர்க்காமல் தக்காளி சாஸ் மற்றும் புதினா சட்னியுடன் சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.