Food Recipe: சூடான டீயுடன் சுவையான ஸ்நாக்ஸ்.. ஈஸியா மீன் பக்கோடா செய்வது எப்படி..?
Delicious Fish Pakoda: மீன் பக்கோடாக்கள் வெளியில் இருந்து மொறுமொறுப்பாகவும், உள்ளே இருந்து மென்மையாகவும் இருக்கும். இதனை ருசிப்பது புதுவித அனுபவத்தை கொடுக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த செய்முறையை பின்பற்றி செய்து அசத்துங்கள். இதை உங்களுக்கு விருப்பமான முறையில் சூடான டீ அல்லது பிரியாணிக்கு சைடிஸாக சாப்பிடலாம்.

மீன் (Fish) சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது. எந்த பருவ காலமாக இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருக்க மீன் சார்ந்த கடல் உணவுகளை சாப்பிடுவது முக்கியம். மீனில் புரதம், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவரை உள்ளது. இதை உட்கொள்வது உடலுக்கு ஆற்றலை தந்து நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. வழக்கம்போல் மீனை குழம்பு மற்றும் வறுக்காமல் வித்தியாசமான முறையில் பக்கோடா செய்யலாம். மீன் பக்கோடாவை ஒரு முறையாவது ருசித்தவர் அதன் சுவையை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். சாலையோர கடைகள் முதல் பெரிய பெரிய உணவகங்கள் வரை மீன் பக்கோடா (Fish Pakoda) மெனு இருக்கும். அதன்படி, இங்கு மீனை கொண்டு எப்படி மீன் பக்கோடா செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
மீன் பக்கோடாக்கள் வெளியில் இருந்து மொறுமொறுப்பாகவும், உள்ளே இருந்து மென்மையாகவும் இருக்கும். இதனை ருசிப்பது புதுவித அனுபவத்தை கொடுக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த செய்முறையை பின்பற்றி செய்து அசத்துங்கள்.
மீன் பக்கோடா
தேவையான பொருட்கள்:
- மீன் – 400 கிராம்
- கடலை மாவு – 1 கப்
- அரிசி மாவு – 2 தேக்கரண்டி
- இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
- கரம் மசாலா – அரை தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
- சில்லி பிளக்ஸ் – அரை தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
மீன் பக்கோடா செய்வது எப்படி..?
- மீன் பக்கோடா தயாரிக்க, முதலில் 500 கிராம் மீனை வெட்டி நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மீது 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கைகளால் கலக்கி கொள்ளவும். 15-20 நிமிடங்கள் தனியாக வைக்கவும், இதனால் மசாலாப் பொருட்கள் மீனில் நன்றாக உறிஞ்சி கொள்ளும்.
- இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் சில்லி பிளக்ஸ், 2 சிட்டிகை கருப்பு மிளகு தூள், 1/2 டேபிள் ஸ்பூன் கருப்பு மிளகு தூள், அரை டேபிள் ஸ்பூன் சீரக தூள், 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக தயார் செய்து கொள்ளவும்.
- மாவானது மீனில் மேல் நன்றாக கெட்டியாக ஒட்டி கொள்ளும் அளவிற்கு பதமாக இருக்க வேண்டும். இப்போது ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி காத்திருக்கவும். அதற்குள், மீனுடன் 2 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் 2 தேக்கரண்டி கான்ப்ளார் மாவு சேர்க்கவும். இப்போது தண்ணீர் தெளித்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். இப்போது அதை 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- இப்போது அவற்றை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வறுக்கவும். அவற்றை ஒரு தட்டில் எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும், இதனால் மீதமுள்ள எண்ணெய் வெளியேறும். உங்கள் மீன் பக்கோடாக்கள் தயாராக உள்ளன. இதை உங்களுக்கு விருப்பமான முறையில் சூடான டீ அல்லது பிரியாணிக்கு சைடிஸாக சாப்பிடலாம்.