Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: மழைக்காலத்தில் காரசாரமா ஏதாச்சும் ருசிக்கணுமா..? செட்டிநாடு சிக்கன் ட்ரை பண்ணுங்க!

Chettinad Chicken Recipe: மழைக்காலத்தில் சூடான, காரசாரமான உணவுகளின் தேவை அதிகரிக்கும். இந்த செட்டிநாடு சிக்கன் செய்முறை, எளிதில் வீட்டிலேயே செய்ய ஏதுவானது. தேவையான மசாலாப் பொருட்களை அரைத்து, சிக்கனை மரைனேட் செய்து, வதக்கி சமைக்க வேண்டும். சாதம், ரொட்டி, நான் போன்றவற்றுடன் சுவையாக சாப்பிடலாம்.

Food Recipe: மழைக்காலத்தில் காரசாரமா ஏதாச்சும் ருசிக்கணுமா..? செட்டிநாடு சிக்கன் ட்ரை பண்ணுங்க!
செட்டிநாடு சிக்கன்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Jul 2025 17:58 PM

மழைக்காலம் (Rainy Season) தொடங்கியதும் தொடங்கியது சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதுபோன்ற ஜில்லென்ற பருவத்தில் நல்ல காரசாரமான உணவுகளை ருசி பார்க்க வேண்டும் என மனமும், நாக்கும் விரும்பும். அதன்படி, சூடான சுவையான செட்டிநாடு சிக்கனை (Chettinad Chicken) சாப்பிடலாம். இந்த ரெசிபியானது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம். இதை செய்தால் சாதம் மட்டுமின்றி, ரொட்டி, நான் போன்றவைகளுடன் வைத்து ருசிக்கலாம். இதை செய்வது என்பதும் மிகவும் எளிதானது. இதையடுத்து, செட்டிநாட்டு சிக்கனை எளிதான வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சூடான டீயுடன் சுவையான ஸ்நாக்ஸ்.. ஈஸியா மீன் பக்கோடா செய்வது எப்படி..?

செட்டிநாடு சிக்கன்:

தேவையான மசாலா பொருட்கள்:

  • மல்லி – 1 டீஸ்பூன்
  • வெந்தயம் – 2 டீஸ்பூன்
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • இலவங்கப்பட்டை – 1 அங்குலம்
  • தனி மிளகாய் – 3
  • காஷ்மீர் சிவப்பு மிளகாய் – 2
  • ஸ்டார் – 1
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • ஏலக்காய் – 2
  • கிராம்பு – 6 துண்டுகள்
  • தேங்காய் – 2 டீஸ்பூன்
  • இஞ்சி – ½ அங்குலம்
  • பூண்டு – 3
  • உப்பு – தேவையான அளவு

மற்ற பொருட்கள்:

  • சிக்கன் – 500 கிராம்
  • தயிர் – 1 ½ டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
  • நெய் – 1 டீஸ்பூன்
  • வெங்காயம் – 1
  • மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
  • உப்பு – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 10
  • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

ALSO READ: ஹாட் அண்ட் டேஸ்ட்! கிரிஸ்பி சிக்கன் லெக் பிரை ரெசிபி இதோ..!

செட்டிநாடு சிக்கன் செய்வது எப்படி..?

  1. முதலில் கடையில் வாங்கி வந்த சிக்கனை நன்றாக கழுவிய பின், மஞ்சள் மற்றும் உப்பு போட்டு நன்றாக அலசி எடுத்து கொள்ளவும்.
  2. அடுத்து செட்டிநாடு சிக்கன் செய்ய முக்கியமான மசாலா செய்ய வேண்டும், அதற்கு, இஞ்சி, பூண்டை தவிர வெந்தயம், மல்லி, ஸ்டார், தனி மிளகாய், காஷ்மீரி மிளகாய், ஏலக்காய், தேங்காய் சில் உள்ளிட்ட மற்ற அனைத்து பொருட்களையும் வறுத்து நன்றாக ஆறவைத்து அரைக்கவும்.
  3. இதை தொடர்ந்து, வறுத்த மசாலாப் பொருட்களுடன் இஞ்சி, பூண்டு மற்றும் மீண்டும் தேங்காய் சிறிதளவு சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மென்மையான பேஸ்ட் தயாரிக்கவும்.
  4.  இந்த பேஸ்ட்டை சிக்கனுடன் சேர்த்து எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து 60 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  5. அடுத்ததாக, கேஸ் அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை வைத்து சூடானதும் ஒரு ஸ்பூன் நெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
  6. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இப்போது மரைனேட் செய்த சிக்கன் சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
  7. இப்போது, தேவையான அளவிலான உப்பு சேர்த்து செட்டிநாடு மசாலா முழுவதுமாக வேகும் வரை சமைக்கவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு சிக்கன் ரெடி.
  8. இறுதியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தூவி மதிய வேளையில் சூடான சாதத்துடன், அப்படி இல்லையென்றால், இரவில் பரோட்டா, சப்பாதி, நான் உடன் சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும்.