Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: தக்காளி ரசத்தை தள்ளுங்க! ஆரோக்கியத்திற்கு சிறந்த சிக்கன் ரசம்.. இவ்வளவு சிம்பிளா செய்யலாமா..?

Delicious Chicken Rasam Recipe: இன்றைய சூழலில், புதிய உணவுகளை தேடுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ரசம் அனைவருக்கும் பிடித்தமானது. இந்த செய்முறை, எளிதாகவும், சுவையாகவும் சிக்கன் ரசம் செய்வதை விளக்குகிறது. தக்காளி ரசத்திற்கு மாற்றாக, ஊட்டச்சத்து நிறைந்த சிக்கன் ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இந்த செய்முறையை பின்பற்றி, சுவையான சிக்கன் ரசத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

Food Recipe: தக்காளி ரசத்தை தள்ளுங்க! ஆரோக்கியத்திற்கு சிறந்த சிக்கன் ரசம்.. இவ்வளவு சிம்பிளா செய்யலாமா..?
சிக்கன் ரசம்Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 29 Jun 2025 17:50 PM

இன்றைய நவீன வாழ்க்கையில் தினமும் மக்களுக்கு ஏதாவது ஒன்றை புதுசாக சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதேநேரத்தில், சிலருக்கு எத்தனை வகையான உணவுகள் இருந்தாலும், ரசம் இல்லை என்றால் அவர்களுக்கு சாப்பிட்ட திருப்தியை தராது. ரசத்துடன் சாதம் சாப்பிடுவது ஒரு திருப்திகரமான அனுபவம் ஆகும். ரசம் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, குடிப்பதற்கும் சிறந்தது. குறிப்பாக, இதுபோன்ற பருவ நிலை மாற்றத்தின்போது ரசம் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகளில் ஒன்று. அதேநேரத்தில், நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்து, தக்காளி ரசம் சாப்பிட போர் அடித்தால், நீங்கள் சிக்கனை கொண்டு ரசம் (Chicken Rasam) செய்யலாம். இதன் சுவையானது உங்களை வேறு உலகத்திற்கு அழைத்து செல்லும். அந்தவகையில், எளிதாகவும், சுவையாகவும் சிக்கன் (Chicken) ரசத்தை எவ்வாறு சுவைக்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

தக்காளி ரசத்தை ஒப்பிடுகையில், சிக்கன் கொண்டு தயாரிக்கப்படும் ரசம் ஊட்டச்ச்சத்துகளை கொண்டுள்ளது. காரமான, புளிப்பு, உப்பு மற்றும் சிக்கன் என அனைத்து வகையான சுவை கொண்ட இந்த ரசம், சாதத்துடன் கலந்து சாப்பிடுகையில் அமிர்தமாக இருக்கும். இந்த சிக்கன் ரசத்தை குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என அனைவரும் சாப்பிடலாம்.

சிக்கன் ரசம் செய்ய தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 1 கப்
  • எலுமிச்சை சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • வெங்காய பேஸ்ட் – ஒரு கப்
  • கொத்தமல்லி தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • பூண்டு – 3
  • இஞ்சி – ஒரு சிறிய பூண்டு
  • கிராம்பு- 2
  • ஏலக்காய் – 2
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கசகசா – அரை டேபிள்ஸ்பூன்

சிக்கன் ரசம் செய்வது எப்படி..?

  1. கடையில் வாங்கிய சிக்கனை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கழுவியபின், சிக்கனை சிறிது வேகவைத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். அடுத்ததாக வெங்காயம், பூண்டு, இஞ்சி, கிராம்பு, ஏலக்காய், மிளகு, மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகலை மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
  2. இப்போது, அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து சூடானதும் நெய் சேர்க்கவும். நெய் சூடானதும் அரைத்த பொருட்களை சேர்த்து பசனை வாசனை போகும்வரை குறைந்த தீயில் வைத்து சமைக்கவும். சுமார் 5 நிமிடங்கள் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  3. தண்ணீர் கொதித்ததும், ஏற்கனவே சமைத்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, குறைந்த தீயில் 20 நிமிடங்கள் வேக விடவும். நன்றாக கொதித்ததும், கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு முறை கலக்கவும். அவ்வளவுதான், சிக்கன் ரசம் தயார். இதனை 2 முதல் 3 நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம். இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதை தேவையென்றால் சூப்பாகவும் குடிக்கலாம்.