Food Recipes: ஈவ்னிங் ஸ்நாக்ஸுக்கு சூப்பர் டிஸ்.. காரசாரமான இறால் டிக்கா ரெசிபி இதோ..!
Prawn Tikka Recipe: இந்தக் கட்டுரை சுவையான இறால் டிக்கா மசாலா செய்முறையை விளக்குகிறது. தேவையான பொருட்கள், படிப்படியான செய்முறை மற்றும் சில பயனுள்ள குறிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. விரைவாகவும் எளிதாகவும் செய்யக்கூடிய இந்த செய்முறை, கடல் உணவு ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கடல் உணவு (Sea Food) வகையில் இறால் (Prawn) மிகவும் ருசியான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இவை சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், சமைப்பதும் மிகவும் எளிதானது. சில நிமிடங்களில் நீங்கள் செய்யக்கூடிய பல்வேறு வகையான சுவையான இறால் ரெசிபிகள் உள்ளன. இறால்களை ஒரு ஸ்நாக்ஸாகவோ, ஏதேனும் உணவுக்கு சைடிஸாகவோ எடுத்து கொள்ளலாம். அதன்படி, இன்று நீங்கள் வீட்டிலேயே எப்படி இறால் டிக்கா மசாலா (Prawns Tikka Masala) செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
இறால் டிக்கா மசாலா
தேவையான பொருட்கள்:
இறால்கள் – அரை கிலோ (சுத்தம் செய்யப்பட்டது)
தயிர் – 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புதினா சட்னி, எலுமிச்சை துண்டுகள்
ALSO READ: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மீன் வறுவல்.. வீட்டிலேயே சூப்பரா இப்படி செய்து பாருங்க..!




இறால் டிக்கா மசாலா செய்வது எப்படி?
- ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி, பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக போட்டு நன்றாக கலக்கவும்
- நன்றாக சுத்தம் செய்த இறால்களை மாரினேட்டில் சேர்த்து நன்கு கலக்கவும். இதன்பிறகு, குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
- கிரில் அல்லது அடுப்பை மிதமான வெப்பத்திற்கு முன்கூட்டியே சூடாக்கவும். மரைனேட் செய்யப்பட்ட இறாலை போட்டு, ஒவ்வொரு பக்கத்தில் 3 முதல் 4 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- முடிந்தவரை இளஞ்சிவப்பு நிறமாகவும் அல்லது சிறிது கருகும் வரை சமைக்கவும்.
- அடுத்ததாக, புதினா சட்னி மற்றும் எலுமிச்சை துண்டுகளை பிழிந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
டிப்ஸ்:
- இறால்களை மரைனேட் செய்வதற்கு முன் அவற்றை நன்றாக கழுவி சுத்தமாக வைக்கவும்.
- கரிகளை பயன்படுத்தி சமைத்தால், இறால் தீயில் கருகாமல் இருக்க, பயன்படுத்துவதற்கு முன் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மசாலா அளவை சரிசெய்யலாம். அதன்படி, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிவப்பு மிளகாய் தூளைச் சேர்க்கலாம்.
ALSO READ: சூப்பரா ஒரு ஸ்வீட்ஸ் சாப்பிட ஆசையா..? இந்த அவல் அல்வா ரெசிபியை ட்ரை பண்ணுங்க..!
சேமிப்பு மற்றும் பரிமாறுதல்
- இறால் டிக்காவை சமைத்த உடனேயே சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
- சமைத்த இறால்கள் எஞ்சியிருந்தால், அவற்றை காற்று புகாத கொள்கலனில் குளிர்சாதன பெட்டியில் வைத்து 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
- இறால் டிக்காவைச் சிறிது நேரம் முன்கூட்டியே சூடாக்கி, அடுப்பில் அல்லது கிரில்லில் வைத்துப் பரிமாறவும்.