Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: சூப்பரா ஒரு ஸ்வீட்ஸ் சாப்பிட ஆசையா..? இந்த அவல் அல்வா ரெசிபியை ட்ரை பண்ணுங்க..!

Easy Aval Halwa Recipe: வீட்டில் எளிதாக அவல் அல்வா செய்வதற்கான செய்முறையை வழங்குகிறது. தேவையான பொருட்கள் மற்றும் படிகளுடன், பாரம்பரியமான ருசியை வீட்டிலேயே பெறுவது எப்படி என்பதை விளக்குகிறது. கடைகளில் கிடைக்கும் கலப்படமான இனிப்புகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான, சுவையான அவல் அல்வாவை உங்கள் குடும்பத்துடன் அனுபவிக்கலாம்.

Food Recipe: சூப்பரா ஒரு ஸ்வீட்ஸ் சாப்பிட ஆசையா..? இந்த அவல் அல்வா ரெசிபியை ட்ரை பண்ணுங்க..!
அவல் அல்வாImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 24 Jul 2025 19:10 PM

வீட்டில் விசேஷம் என்றால் நம் வீட்டில் முதலில் பெரியவர்கள் செய்வது இனிப்பு (Sweets) வகைகள்தான். நம் வீட்டின் பண்டிகையின்போது பணியாரம், அதிரசம், அல்வா போன்றவை பாரம்பரியாக செய்து வருகிறது. இன்றைய நவீன காலத்தில் பலரும் வீடுகளில் சுவையான இனிப்பு வகைகளை செய்யாமல், கடைகளில் சென்று வாழ்கிறோம். அதையே, நாம் வீட்டில் செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாக்கும். கடைகளில் எப்படியும் பழைய மற்றும் கலப்படம் செய்யப்பட்ட ஸ்வீட்ஸ்கள் வாங்கினால், உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். எனவே, வீட்டிலேயே சுவையாக அவல் அல்வா (Aval Halwa) செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். இவற்றை ஒருமுறை உங்கள் வீட்டு உறவினர்களுக்கு செய்து கொடுத்தால், மீண்டும் மீண்டும் உங்கள் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுப்பார்கள்.

அவல் அல்வா செய்வது எப்படி..?

அவல் அல்வா

ALSO READ: 5 நிமிடத்தில் ஆஹா டேஸ்ட்..! பால் பவுடர் பர்பி ரெசிபி தெரியுமா..?

செய்ய தேவையான பொருட்கள்:

  1. அவல் – 1 கப்
  2. நெய் – 7 டீஸ்பூன்
  3. முந்திரி, திராட்சை – தலா 8 முதல் 10
  4. தண்ணீர் – 1 கப்
  5. பால் – 2 கப்
  6. தேங்காய் துருவல் – 2 கப்
  7. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  8. ஃபுட் கலர் – ஆரஞ்சு அல்லது மஞ்சள் சிறிதளவு

அவல் அல்வா செய்வது எப்படி..?

  • முதலில் கடையில் வாங்கிய அவலை எண்ணெய் அல்லது தண்ணீர் இல்லாமல் ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • அதன்பிறகு, பச்சை பாலை சூடாக காய்ச்சி ஒரு கப்பில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  • இப்போது, அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை வைத்து 5 டீஸ்பூன் நெய் சேர்க்கவும், நெய் நன்றாக உருகும் வரை காத்திருக்கவும்.
  • நெய் உருகிய பிறகு, வறுத்த அவலை சேர்த்து, ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும், இதனுடன், தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.
  • அடுத்ததாக, மீண்டும் 1 ஸ்பூன் நெய் மற்றும் காயவைத்த பால் சேர்த்து மீண்டும் மீண்டும் கிளறவும்.
  • நன்றாக கெட்டியாகும் முன், தேங்காய் துருவல், மீதமுள்ள நெய் மற்றும் ஃபுட் கலரை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இறுதியாக, ஏலக்காய் தூள், முந்திரி மற்றும் திராட்சையும் சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.

ALSO READ: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மீன் வறுவல்.. வீட்டிலேயே சூப்பரா இப்படி செய்து பாருங்க..!

  • அவ்வளவுதான், மற்ற உணவு பண்டங்களுடன் அவல் அல்வாவை சுவைத்தால் சுவை தாறுமாறாக இருக்கும்.