AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Food Recipe: 5 நிமிடத்தில் ஆஹா டேஸ்ட்..! பால் பவுடர் பர்பி ரெசிபி தெரியுமா..?

Milk Powder Burfi Recipe: இந்தியாவில் பண்டிகை நாட்களில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய வேக உலகில், வீட்டில் இனிப்பு செய்வது சவாலாக உள்ளது. இந்த 5 நிமிட பால் பவுடர் பர்பி செய்முறை, குறைந்த பொருட்களைப் பயன்படுத்தி, சுலபமாகவும், ஆரோக்கியமானதாகவும், ருசியாகவும் இனிப்பை தயாரிக்க உதவும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் இந்த சுவையான பர்பியை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

Food Recipe: 5 நிமிடத்தில் ஆஹா டேஸ்ட்..! பால் பவுடர் பர்பி ரெசிபி தெரியுமா..?
பால் பவுடர் பர்பி ரெசிபிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Jun 2025 17:42 PM IST

இந்தியாவில் பராம்பரியமாக விஷேசங்களிலும், விழாக்களிலும் இனிப்புகள் (Sweets) அதிகளவில் பரிமாறப்படும். இனிப்புகளையும், இந்தியாவையும் பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். காலம் காலமாக நமது வீடுகளில் லட்டு, அதிரசம், ஜிலேபி மற்றும் பூந்தி போன்றவை தீபாவளி (Diwali) மற்றும் பண்டிகை நாட்களில் செய்து, குடும்பத்தினருக்கு பரிமாறப்படுவது மட்டுமின்றி, அக்கம்பக்கத்தினருக்கும் கொடுத்து அழகு பார்ப்போம். இன்றைய காலத்தில் யாரும் வீடுகளில் எந்தவொரு இனிப்பு வகைகளையும் செய்வது கிடையாது மாறாக, பேக்கரி மற்றும் ஸ்வீட் கடைகளில் அரை கிலோ மற்றும் 1 கிலோ அளவில் வாங்கி வைப்போம். இது ஆரோக்கியமானதாக இருக்கும் என்றால், கேள்விகுறியாகதான் இருக்கும். இந்தநிலையில், உங்கள் குடும்பத்தாருக்கு ஆரோக்கியமாக ஏதாவது செய்ய விரும்பினால், இந்த உடனடி பால் பவுடர் பர்பியை (Milk Powder Burfi) முயற்சி செய்யலாம்.

ஒரு சில பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வெறும் 5 நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய இந்த பால் பவுடர் பர்பி, குழந்தைகளுக்கு மட்டுமல்ல, முழு குடும்பத்தினருக்கும் பிடிக்கும். எனவே, உடனடியாக பால் பவுடரை எப்படி தயாரிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். இந்த ரெசிபியானது சவுத் இந்தியன் ஃபுட் ரெசிபி என்னும் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

லிங்க் கீழே:

பால் பவுடர் பர்பி:

  • பால் பவுடர் – முக்கால் கப்
  • சர்க்கரை – 1 கப்
  • தண்ணீர் – அரை கிளாஸ்
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • பிஸ்தா, பாதாம் – 5 முதல் 6

பால் பவுடர் பர்பி செய்வது எப்படி..?

  1. முதலில் தடிமனான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சர்க்கரையை கொட்டவும். அதனுடன், அரை கிளாஸ் தண்ணீரை சேர்க்கவும்.
  2. சர்க்கரையானது நன்கு கரைந்து கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து லேசாக கிளறவும். இந்த கலவை கெட்டியாகும்போது, பால் பவுடரை சேர்த்து, கட்டி சேராதவாறு கிளறவும்.
  3. தொடர்ந்து, இதனுடன் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்த்து மீண்டும் கெட்டியாகும் வரை நன்கு கிளறவும். பின்னர் மற்றொரு ஸ்பூன் நெய்யை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.
  4. இப்போது, எடுத்து வைத்துள்ள பாதாம் மற்றும் பிஸ்தாகளை நீள வாக்கில் வெட்டி எடுத்து கொள்ளவும். அடுத்ததாக, நெய் தடவிய ஒரு கவரில் பாத்திரத்தின் மீதுவைக்கவும்.
  5. அந்த பாத்திரத்தில் உள்ள நெய் தடவிய கவரின்போது பாதாம் மற்றும் பிஸ்தாவை மேலே பரப்பவும். இதன் தொடர்ச்சியாக, தயாரித்துவைத்துள்ள பர்பி கலவை சமமாக ஊற்றவும்.
  6. இப்போது, அது காயும் வரை காத்திருந்து சிறிது நேரத்திற்கு பிறகு பர்பியை நீங்கள் விரும்பும் வடிவத்தில் வெட்டவும். அவ்வளவுதான், சுவையான பால் பவுடர் பர்பி ரெடி.

 

Follow Us