Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: சன்டேவில் மணமணக்கும் மட்டன் சாப்ஸ்.. சூப்பராக இப்படி செய்து சாப்பிடுங்க!

Homemade Mutton Chops: இந்த ரெசிபி ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சாப்ஸை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்பதை விளக்குகிறது. மட்டனை மசாலாக்களில் ஊற வைத்து, பின்னர் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மற்றும் மசாலாக்களுடன் சேர்த்து வேகவைக்க வேண்டும். இறுதியில், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து, ருசியான மட்டன் சாப்ஸ் தயார். இந்த ரெசிபி உங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Food Recipe: சன்டேவில் மணமணக்கும் மட்டன் சாப்ஸ்.. சூப்பராக இப்படி செய்து சாப்பிடுங்க!
மட்டன் சாப்ஸ் ரெசிபிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 22 Jun 2025 15:43 PM

ஒரு சிலருக்கு சிக்கன் பிடிக்கும், ஒரு சிலருக்கு மீன் (Fish) பிடிக்கும், ஒரு சிலருக்கு மட்டன் என்றால் உயிரையே விடுவார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் (Sunday) வீட்டிலேயே ஸ்பெஷல் மட்டன் ரெசிபி செய்ய நினைத்தால், உங்களுக்கான புதிய ரெசிபியை இப்படி செய்து பாருங்கள். நீங்கள் ஏதேனும் ஹோட்டலுக்கு சென்றபோது சுவையான மட்டன் சாப்ஸை சாப்பிட்டு, அதன் சுவைக்கு அடிமையும் ஆகியிருக்கலாம். ஆனால், அதே ரெசிபியை வீட்டில் பலமுறை செய்தும் உங்களால் அதே சுவையை பெற முடியவில்லை என்ற வருத்தம் உள்ளதா..? இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் வகையில் ஹோட்டல் ஸ்டைலில் தரமான மட்டன் சாப்ஸை (Mutton Chops)  வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம்.

மட்டன் சாப்ஸ்:

தேவையான பொருட்கள்:

  • மட்டன் சாப்ஸ் – 8
  • மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  • தயிர் – அரை கப்
  • மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி தூள்- 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கடுகு என்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1
  • இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி..?

  1. மட்டன் சாப்ஸ் செய்வதற்கு முன், கடைகளில் வாங்கி வந்த மட்டன் துண்டுகளை தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். அதன்பிறகு, ஒரு பாத்திரத்தில் மட்டன் சாப்ஸ் போட்டு, மிளகு தூ, கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி, அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
  2. இப்போது, அடுப்பை ஆன் செய்து பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். அதனை தொடர்ந்து, இஞ்சி பூண்டு விழுது, தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
  3. இவை நன்றாக வெந்ததும், மசாலாக்களுடன் ஊற வைத்துள்ள மட்டன் கலவையை சேர்த்து, 3 முதல் 4 நிமிடங்கள் அதிக தீயில் நன்றாக பிரட்டவும். பின்னர், தீயை குறைத்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, 40-45 நிமிடங்கள் மட்டனை வேகவிடவும்.
  4. அடுத்ததாக, மற்றொரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதனை மட்டன் கலவையில் சேர்க்கவும். இறுதியாக, கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைக்கவும்.
  5. அவ்வளவுதான், மட்டன் சாப்ஸ் தயார். இதை ஒருமுறை உங்கள் வீட்டார்கள் ருசித்தால், மீண்டும் மீண்டும் செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவார்கள்.