AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சத்தும் சுவையும் நிரம்பிய கருப்பட்டி பொங்கல்.. எப்படி செய்வது?

Healthy Karupatti Pongal Recipe: கருப்பட்டி பொங்கல் என்பது பாரம்பரியமான தமிழ் இனிப்பு. பச்சரிசி, பாசிப்பருப்பு, கருப்பட்டி, நெய், முந்திரி, திராட்சை ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. கருப்பட்டியின் கால்சியம் மற்றும் தாதுக்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது. இதன் சுவையான செய்முறை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இந்த கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

சத்தும் சுவையும் நிரம்பிய கருப்பட்டி பொங்கல்.. எப்படி செய்வது?
கருப்பட்டி பொங்கல்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 22 Jun 2025 18:26 PM IST

சத்தும் சுவையும் நிரம்பிய கருப்பட்டி பொங்கல் (Karupatti Pongal) ஒரு பாரம்பரிய இனிப்பு உணவாகும். பாசிபருப்பு, பச்சரிசி, கருப்பட்டி, நெய், முந்திரி, திராட்சை ஆகியவற்றால் இது தயாரிக்கப்படுகிறது. முதலில் பருப்பு பொன்னிறமாக வறுக்கப்பட்டு அரிசியுடன் ஊற வைத்து குக்கரில் வேகவைக்கப்படுகிறது. வெல்லம் பாகு செய்து வடிகட்டி, ஏலக்காய்ப்பொடி, வறுத்த முந்திரி, திராட்சையுடன் கலந்து பொங்கல் தயார் செய்யப்படுகிறது. கருப்பட்டியில் உள்ள கால்சியம் மற்றும் தாது சத்துகள் எலும்பை வலுப்படுத்த உதவுகின்றன. மேலும், இது சருமம் இளமையாக இருக்கவும், சுருக்கங்கள் இல்லாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

சத்தும், சுவையும் இணைந்த கருப்பட்டி பொங்கல்

பொங்கல் காலத்தில் இல்லம் முழுக்க இனிக்கும் வாசனை பரவ சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவாக கருப்பட்டி பொங்கல் சிறந்த தேர்வாகும். நம் பழமையான உணவுமுறைகளில் ஒன்றாக கருப்பட்டி பொங்கல், இயற்கை பருப்புகள், நெய் மற்றும் பனைவெல்லம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இங்கு அதன் செய்முறையும், அதனுடன் உள்ள மருத்துவ நன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்

பாசிபருப்பு – ¼ கப்

கருப்பட்டி – ¾ கப் (பொடியாக)

முந்திரி, திராட்சை – தலா 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப்பொடி – ¼ ஸ்பூன்

நெய் – ¼ கப்

சுவையான செய்முறை:

முதல் கட்டமாக, பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு அதையும் பச்சரிசியையும் நன்றாக கழுவி, ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறியதும், குக்கரில் 3 கப் தண்ணீர் மற்றும் நெய் சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும். வேகும் இடையே, வெல்லத்தை கால் டம்ளர் தண்ணீரில் பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

வெவ்வேறு பாத்திரத்தில் முந்திரியும் திராட்சையும் நெய்யில் வறுத்து வைக்க வேண்டும். குக்கர் அழுத்தம் குறைந்ததும், அதில் வெல்லப்பாகு, ஏலக்காய்ப்பொடி மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாக கிளறி விட்டால் சுவையான கருப்பட்டி பொங்கல் தயாராகும். விருப்பத்திற்கேற்ப தேங்காய் துருவல் சேர்க்கலாம்.

கருப்பட்டியின் ஆரோக்கிய நன்மைகள்:

கருப்பட்டியில் உள்ள கால்சியம் மற்றும் தாது சத்துகள் எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்கும் சக்தி உள்ளது. மேலும், கருப்பட்டி சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, தோல் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கிறது. இத்துடன், இயற்கை இனிப்பாகவும், இரத்தத்தை சுத்தி செய்யும் தன்மையுடனும் கருப்பட்டி மக்களுக்கு சிறந்த ஆரோக்கிய உணவாக விளங்குகிறது.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உணக்கூடிய ஒரு இனிப்பு வகை. பசியையும் மன உற்சாகத்தையும் ஒரே நேரத்தில் சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது.

Follow Us