AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Food Recipe: Food Recipe: வேற லெவல் டேஸ்ட்.. மீனை வைத்து மொறுமொறு க்ரில்டு.. வீட்டிலேயே சிம்பிளா செய்வது எப்படி?

Grilled Fish Recipe: இன்றைய காலத்தில் சிக்கன் மற்றும் மட்டன் அதிக விலை மற்றும் ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எனவே, விலை மலிவானதும், ஆரோக்கியமானதுமான மீனை சாப்பிடுவது நல்லது. இந்த செய்முறையில், சுவையான க்ரில்டு மீனை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று விளக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கண்பார்வைக்கும் இது நல்லது. மீனை மசாலாப் பொடியில் ஊற வைத்து, கிரில் செய்து எலுமிச்சை சாறு மற்றும் சில்லி பிளேக்ஸ் சேர்த்து பரிமாறவும்.

Food Recipe: Food Recipe: வேற லெவல் டேஸ்ட்.. மீனை வைத்து மொறுமொறு க்ரில்டு.. வீட்டிலேயே சிம்பிளா செய்வது எப்படி?
க்ரில்ட் ஃபிஸ்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 11 Jun 2025 20:24 PM IST

இன்றைய கால தலைமுறையினர் அதிகமாக சிக்கனை (Chicken) விரும்பி சாப்பிடுகிறார்கள். இருப்பினும், இதை அதிகளவில் எடுத்துகொள்வது பிரச்சனையை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், மட்டனை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தாலும், அதன் விலையை கேட்டு நமக்கு தலையே சுத்திவிடும். இப்படி சிக்கனும், மட்டனும் இன்றி விலையிலும், ஆரோக்கியத்திலும் சிறந்தது என்றால் ஒரே தீர்வு மீன்தான். மீனில் (Fish) உள்ள புரதங்கள் உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை தரும். இவை குழந்தைகளுக்கு கொடுப்பது மூலம் கண் பார்வை சிறுவயது முதல் நன்றாக இருக்க உதவி செய்யும். அந்தவகையில், சுவையாக வீட்டிலேயே எப்படி க்ரில்டு ஃபிஸ் (Grilled Fish) எப்படி செய்வது என்றே பார்க்கலாம்.

க்ரில்டு ஃபிஸ்:

தேவையான பொருட்கள்:

  • மீன் – 10 துண்டுகள்
  •  எலுமிச்சை சாறு – 3 டேபிள் ஸ்பூன்
  •  சூரியகாந்தி எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • சில்லி ப்ளேக்ஸ் – 10 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  •  பூண்டு – 4 பல்
  • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
  • கொத்தமல்லி தூள் – 1/2 ஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்

க்ரில்டு ஃபிஸ் செய்வது எப்படி..?

  1. முதலில் கடைகளில் வாங்கிய மீன் துண்டுகளை மஞ்சள் தூள் கொண்டு சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும்.
  2. அடுத்ததாக, கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளை எடுத்து சூரியகாந்தி எண்ணெயை ஊற்றி மெதுவாக மசாஜ் செய்து, ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  3. இப்போது பூண்டு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், பச்சை மிளகாய், வெந்தய இலைகள், கொத்தமல்லி தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
  4. அதனுடன், சிறிதளவு சூரியகாந்தி எண்ணெய் சேர்த்து வைத்துள்ள பேஸ்ட்டில் கலந்து கொள்ளவும்.
  5. இப்போது அரைத்த எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளில் பேஸ்டை தடவி, 15 முதல் 30 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்கவும்.
  6. மரினேட் செய்யப்பட்ட மீனை முன்கூட்டியே சூடாக்கப்பட்ட கிரில் அல்லது அடுப்பில் வைத்து, இருபுறமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை அல்லது 5 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
  7. இப்போது, ஒரு தட்டில் மீன் துண்டுகளை மாற்றி எடுத்து கொள்ளவும். அவ்வளவுதான், கடைசியாக எலுமிச்சை ஜூஸ் மற்றும் சில்லி பிளேக்ஸ்களை தூவினால் க்ரில்ட் ஃபிஸ் ரெடி.
  8. இதனுடன் டொமேட்டோ சாஸ் அல்லது சாலட்டுடன் பரிமாறினால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

 

Follow Us