Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: சுவையில் கலக்கும் கடாய் காளான்.. எளிய செய்முறை விளக்கம் இதோ!

Kadai Mushroom Recipe: தக்காளி, இஞ்சி, முந்திரி போன்ற பொருட்களை பயன்படுத்தி கிரேவி தயார் செய்யும் முறை, காளான்களை சரியாக வெட்டுவது, மற்றும் கடாயில் சமைக்கும் முறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. படங்களுடன் கூடிய படிப்படியான வழிமுறைகள் உங்கள் சமையலை எளிதாக்கும். இது குடும்பத்தினருக்கு ஒரு சிறந்த மதிய அல்லது இரவு உணவாக இருக்கும்.

Food Recipe: சுவையில் கலக்கும் கடாய் காளான்.. எளிய செய்முறை விளக்கம் இதோ!
கடாய் காளான்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jun 2025 20:34 PM

தினமும் மக்கள் ஏதேனும் வித்தியாசமாகவும், சுவையாகவும் அதேநேரத்தில் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்தவகையில், உங்களுக்கு காளான் ஒரு சிறந்தவையாக இருக்கும். காளான்கள் (Mushroom) பெரியவர்கள் மட்டுமின்றி, சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதன்படி, வீட்டில் வறுத்த காளான்கள், ஸ்டஃப்டு காளான்கள் போன்றவற்றை செய்து அசத்தலாம். அதேநேரத்தில், மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு ஏதாவது ஸ்பெஷலாக குடும்பத்தினருக்கு செய்ய விரும்பினால், இன்று நீங்கள் கடாய் காளான் (Kadai Mushroom) செய்து அசத்தலாம். அதன் செய்முறையும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கடாய் காளான்

தேவையான பொருட்கள்:

  • காளான்கள் – 8-10
  • குடை மிளகாய் – 1
  • முந்திரி – 10 முதல் 12
  • மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கரம் மசாலா – 1/4 ஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • தக்காளி – 3
  • இஞ்சி – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  • கஸ்தூரி மேத்தி – 2 ஸ்பூன்
  • பெருங்காயம் – சிறிதளவு
  • சீரகம் – 1/2 ஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்

கடாய் காளான் செய்வது எப்படி..?

  1. கடாய் காளான் தயாரிக்க முதலில் கிரேவி பதத்திற்கு தயார் செய்யவும். இதற்காக தக்காளி, இஞ்சி, முந்திரி மற்றும் அரை கப் தண்ணீரை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  2. இப்போது, காளான்களை தண்ணீரில் கழுவி, கத்தியின் உதவியுடன் 2 ஆக வெட்டி கொள்ளவும். இதனுடன், கேப்சிகத்தையும் நீண்ட துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  3. அடுத்ததாக, அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், கேப்சிகம் சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். பின்னர், அவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து தனியாக வைக்கவும்.
  4. இப்போது, கடாயில் மீதமுள்ள எண்ணெயில் சீரகத்தை சேர்க்கவும். சீரகம் வெடித்தவுடன் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தக்காள் – முந்திரி – இஞ்சி விழுது ஆகியவற்றை எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.
  5. 2 நிமிடங்களுக்கு பிறகு, அந்த கலவையில் மிளகாய் தூள் மற்றும் கஸ்தூரி மேத்தியை சேர்க்கவும். இப்போது, அந்த கிரேவியில் எண்ணெய் மேலே தெரியும் வரை சமைக்கவும். கிரேவி நன்கு தயாரனதும், காளான்கள், கேப்சிகம், உப்பு கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும்.
  6. கடைசியாக 2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் சமைக்கவும். கிரேவி காளான்களில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்தால் கடாய் காளான் தயார்.