Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: பானிபூரி பிரியரா நீங்கள்..? வீட்டிலேயே சுத்தமா இப்படி செய்யலாம்!

Homemade Pani Puri Recipe: வீட்டில் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், சுவையான பாணி பூரியை எப்படி செய்வது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. ரவை மற்றும் மைதா மாவு கொண்டு பூரியை தயார் செய்யும் முறை, உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி மற்றும் மசாலாக்கள் கொண்டு மசாலாவை தயார் செய்யும் முறை விளக்கப்பட்டுள்ளது.

Food Recipe: பானிபூரி பிரியரா நீங்கள்..? வீட்டிலேயே சுத்தமா இப்படி செய்யலாம்!
பானிபூரிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 10 Jul 2025 16:22 PM

பானி பூரி (Pani Puri) என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் வாயில் நீர் வடிய தொடங்கும். அதிலும், பெண்கள் பானி பூரியின் தீவிர ரசிகைகள் என்றே சொல்லலாம். பானி பூரி சாப்பிட்டால் புளிப்பு, இனிப்பு (Sweet), காரம் என அனைத்து விதமான சுவையை கொடுக்கும். அதனால்தான், பலர் பானி பூரியை வெளியே சாப்பிடுகிறார்கள். இருப்பினும், வெளியில் கலப்படம் செய்யப்பட்ட மற்றும் தரம் இல்லாத பானி பூரி வயிற்றில் சில பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக, கடைகளில் வாங்கப்படும் பானி பூரி பாதுகாப்பானதாக என்றே கேள்வி எழுகிறது. இருந்தாலும் பானி பூரி சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் நமக்கு இருக்கும். எனவே, சுவையான (Tasty) பானி பூரியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

பானிபூரி:

தேவையான பொருட்கள்:

  • பானி பூரி:
  • ரவை – அரை கப்
  • மைதா மாவு – 1 1/2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 2 ஸ்பூன்
  • தண்ணீர் – 1 டம்ளர்

ALSO READ: சத்தும் சுவையும் நிரம்பிய கருப்பட்டி பொங்கல்.. எப்படி செய்வது?

பானி பூரி மசாலா:

  • உருளைக்கிழங்கு – 3
  • பச்சை பட்டாணி – அரை கப்
  • வெங்காயம் – 2
  • பச்சை மிளகாய் – 2
  • மிளகு தூள் – சிறிதளவு
  • சாட் மசாலா- சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

பானி பூரி தண்ணீர்

  • தயிர் – அரை கப்
  • புளி கரைசல் – அரை கப்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – கைப்பிடி அளவு
  • மிளகு தூள் – 2

பானி பூரி செய்முறை

  1. பானி பூரி செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து மாவை போல் பிசைந்து கொள்ளவும். மாவை ஈரமான துணியில் சில நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் மாவிலிருந்து சிறிய உருண்டைகளை உருட்டி கொள்ளவும்.
  2. சிறிய கிண்ணத்தை கொண்டு வட்ட வடிவத்தில் அவற்றை வெட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது, ஒரு வடச்சட்டியில் எண்ணெயை சூடாக்கி, பானி பூரியை பொரித்து எடுத்து கொள்ளவும்.

பானி பூரி மசாலா செய்வது எப்படி..?

  1. பானி பூரி செய்ய முதலில் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு சூடு அறியதும் அவற்றின் தோலை உரித்து ஒரு பாத்திரத்தில் நன்றாக மசிக்கவும். இப்போது, அதில் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. அதில், சிறிதளவு மிளகு தூள், சாட் மசாலா மற்றும் சுவைக்கு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான், பானி பூரி மசாலா தயார்.

ALSO READ: 5 நிமிடத்தில் ஆஹா டேஸ்ட்..! பால் பவுடர் பர்பி ரெசிபி தெரியுமா..?

பானி பூரி தண்ணீர் செய்வது எப்படி..?

  1. பானி பூரி தண்ணீர் செய்ய முதலில் மிக்ஸியில் புதினா, இஞ்சி, சிறிதளவு பானிபூரி மசாலா, கொத்தமல்லி சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரைத்த மசாலாக்களை கலந்தால் பானிபூரி மசாலா தண்ணீர் ரெடி.