Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: அரிசி இல்லா தோசை சாப்பிட ஆசையா..? ரவை கொண்டு பன் தோசை இப்படி செய்து பாருங்க!

Rava Bun Dosa Recipe: சுவையான பன் தோசை செய்முறை அரிசி மாவு இல்லாமல், ரவையைப் பயன்படுத்தி எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம். தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது போன்ற பொருட்களுடன் ரவையை கலந்து, தோசை சுட்டு, தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். இது மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். முழுமையான செய்முறை கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Food Recipe: அரிசி இல்லா தோசை சாப்பிட ஆசையா..? ரவை கொண்டு பன் தோசை இப்படி செய்து பாருங்க!
ரவை பன் தோசைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 09 Jul 2025 15:07 PM

எத்தனை உணவு வகைகள் இருந்தாலும் தோசை (Dosa) என்றால், சிலருக்கு நாக்கில் தண்ணீர் வடியும். தோசைகளில் பல வகை உண்டு. அதன்படி கறி தோசை, வெங்காய தோசை, மசாலா தோசை, பனீர் தோசை என பல கடைகள் மற்றும் பெரிய பெரிய ஹோட்டல்களில் (Hotel) கிடைக்கின்றன. இருப்பினும், இந்த தோசைகள் அரிசி மற்றும் உளுந்து மூலம் தயாரிக்கப்படும் தோசை வகைகளாகும். இருப்பினும், இன்று தோசனை பிரியர்களுக்காக ஒரு புதிய தோசையை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். உங்களுக்கு பன் தோசை (Bun Dosa) ரெசிபி தெரியுமா..? இதை அரிசி மாவு இல்லாமல் உடனடியாக செய்யலாம். இதன் மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த பன் தோசையை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், இதன் சுவை வேறு லெவலில் இருக்கும்.

பன் தோசை:

தேவையான பொருட்கள்..

  • ரவை – 2 கப்
  • தயிர் – ஒரு கப்
  • பெரிய வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – சிறிதளவு
  • சீரகம் – 2 ஸ்பூன்
  • கடுகு – 2 ஸ்பூன்
  • சமையல் சோடா – சிறிதளவு
  • கறிவேப்பிலை – இரண்டு கிளைகள்
  • கொத்தமல்லி – ஒரு சிறிய கொத்து
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • வேர்க்கடலை – ஒரு ஸ்பூன்
  • உளுந்து – சிறிய கரண்டி
  • காய்ந்த மிளகாய் – இரண்டு

ALSO READ – சிக்கன், மட்டனை விடுங்க..! முருங்கைக்காய் பிரியாணி ரெசிபி தெரியுமா? சுவை அசத்தும்..!

தயாரிக்கும் முறை :

  • மற்ற தோசைகளை செய்வதுபோல் பன் தோசை செய்வது மிகவும் எளிது. ஒரு பாத்திரத்தை எடுத்து, 2 கப் ரவைவை சேர்த்து, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கடலை பருப்பு, உளுந்து பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய் துண்டுகள் மற்றும் புளி சேர்க்கவும் தொடர்ந்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், சீரகம், கடுகு, பொடி பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்கவும்.

ALSO READ – சன்டேவில் மணமணக்கும் மட்டன் சாப்ஸ்.. சூப்பராக இப்படி செய்து சாப்பிடுங்க!

  •  ஊறவைத்த ரவையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கலக்கவும். தோசை மாவாக அரைத்த பிறகு, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இந்த தோசை மாவுடன் உப்பு மற்றும் சமையல் சோடா சேர்த்து தோசை மாவு தயாரிக்க போதுமான தண்ணீர் சேர்க்கவும். வெங்காய தாளிப்புகளை மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • அடுத்ததாக, தோசை கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி, அது சூடானதும், தோசை மாவை ஊற்றவும். தோசையை இருபுறமும் திருப்பி எடுக்கவும். பின்னர் தோசை வீங்கி, பன் தோசையாக மாறும். அவ்வளவுதான், சுவையான பன் தோசை தயார். தேங்காய் சட்னியுடன் சூடாக இருக்கும்போது சாப்பிட்டால், இதன் சுவை வேறு லெவலில் இருக்கும்.