AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாமியார் வேடத்தில் ஜெயின் கோயில்களில் நோட்டம்..திட்டமிட்டு கிலோ கணக்கில் நகை கொள்ளை..அலேக்காக தூக்கிய போலீசார்!

Jain Temples Stealing Jewelry: சென்னை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உள்ள ஜெயன் கோயில்களில் தொடர் நகை மற்றும் பண திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சாமியோர் போல வேடமிட்டு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

சாமியார் வேடத்தில் ஜெயின் கோயில்களில் நோட்டம்..திட்டமிட்டு கிலோ கணக்கில் நகை கொள்ளை..அலேக்காக தூக்கிய போலீசார்!
ஜெயின் கோயில்களில் திருடியவர் கைது
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 13 Feb 2026 08:17 AM IST

தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள சமண கோயில்களில் அடுத்தடுத்து தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், சென்னை சௌகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள ஒரு ஜெயின் கோவிலில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து எலிபன்ட் கேட் போலீசார் வழக்கு பதிவு செய்து சுமார் 1 ஆண்டாக அந்த நபரை தேடி வந்தனர். இந்த சம்பவமானது கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 14- ஆம் தேதி நடைபெற்றது. இந்த கோவிலில் சுமார் 600 கிராம் தங்கம் மற்றும் 10 கிலோ வெள்ளி கிரீடம் திருடு போயிருந்தன. இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரின் முகம் கண்காணிப்பு கேமரா காட்சிகளில் தெளிவாக பதிவாகவில்லை. ஆனால், தெலுங்கானா மாநிலம், கச்சிகுடாவில் உள்ள 2 சமண ஜெயின் கோயில்களில் இதே போல திருட்டு சம்பவம் நடைபெற்றது.

கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபர்

இந்த கோவிலில் பொருத்தப்பட்டிருந்தால் கண்காணிப்பு கேமராவில் அந்த நபரின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த தமிழக போலீசார் தெலுங்கானா சென்றடைந்தனர். பின்னர், வீடு புகுந்து திருடியதாக கர்நாடகாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி மற்றும் விசாரணை அடிப்படையில் அந்த நபரை அடையாளம் கண்டனர். இதில், அந்த நபர் ஜீவன் சிங் (60 வயது) என்பது, இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், நான் ஒரு பிச்சைக்காரன். நீங்கள் என்னை தவறாக நினைக்கிறீர்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: வளிமண்டல காற்று சுழற்சி.. 5 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..

நவி மும்பையில் கொடுத்து வைத்து நகை-பணம்

பின்னர், அவர் கொள்ளையடித்த அனைத்து நகை மற்றும் பணம் ஆகியவை நவி மும்பையில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அதிபரிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார். இவர், மகாராஷ்டிராவில் 10 நாட்கள் முகாமிட்டு நாடு முழுவதும் உள்ள சமணக் கோயில்களை குறி வைத்து திருடி வந்ததும். ஜெயின் கோயில்களில் தங்கம் மற்றும் வெள்ளி கிரீடத்தால் செய்யப்பட்ட பொருள்கள் இருக்கும் என்பதை அறிந்து கொண்டு இவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

சென்னையில் சிறையில் அடைப்பு

இதைத்தொடர்ந்து, ஜீவன் சிங் மகாராஷ்டிராவில் ஒரு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர், இங்கிருந்து அவர் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது வரை அவர், சேலம், செங்கல்பட்டு, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள சமண கோயில்களில் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதே போல, மற்ற மாநிலங்களிலும் திருடி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த பயணி..உடைமையில் அரிய வகை உயிரினங்கள்..பரபரப்பான விமான நிலையம்!

Follow Us