AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Low Pressure Alert : தமிழ்நாட்டில் வருகிற பிப்ரவரி 15, 2026 அன்று இந்திய பெருங்கடலின் அருகிலும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Feb 2026 17:23 PM IST

சென்னை, பிப்ரவரி 12 : தமிழகத்தில் பிப்ரவரி 15, 2026 ஞாயிற்றுக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென் மாவட்டங்களில் லேசனான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வும் எச்சரித்துள்ளது. இந்திய பெருங்கடலின் அருகிலும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மேலடுக்கு காற்று சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பிப்ரவரி 15, 2026 அன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என சென்னை வானிலை ஆய்வும் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பு படி, பிப்ரவரி 12, 2026 அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13, 2026 அன்று வெள்ளிக்கிழமை தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 14, 2026 அன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க : கூட்டணி ஆட்சி கதவை அடைத்த ஸ்டாலின்…ரகசியம் வைத்துள்ள செல்வப்பெருந்தகை..காங்கிரஸுக்கு இருக்கும் 2 சாய்ஸ்!

பனிமூட்டம் தொடர்பான எச்சரிக்கை

வருகிற பிப்ரவரி 13, 2026 வெள்ளிக்கிழமை அதிகாலை நேரங்களில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14, 2026 அன்று அதிகாலை நேரங்களில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிப்ரவரி 15 மற்றும் 16, 2026 ஆகிய 2 நாட்கள் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பைக்கில் புகுந்த பாம்பு..வழக்கறிஞர் செய்த சிம்பிலான செயல்..திருச்சியில் சுவாரஸ்ய நிகழ்வு!

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 17, 2026 அன்று ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நாமக்கல், வேலூர், ஈரோடு, கரூர், தென்காசி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசன பனிமூட்டம் நிலவும் என்றும் அதே நாளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது..

வெப்பநிலை நிலவரம்

வெப்பநிலையை பொறுத்தவரை பிப்ரவரி 12, 2026 அன்று தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்ற வாய்ப்பு இருக்காது என்றும், ஆனால் பிப்ரவரி 13 முதல் 16, 2026 வரை 4 நாட்கள் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பிப்ரவரி 12, 13, 2026 ஆகிய 2 நாட்கல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us