Food Recipe: மழைக்காலத்தில் சூடாக ஸ்நாக்ஸ் வேண்டுமா..? சூப்பரான ஸ்டஃப் மிளகாய் பஜ்ஜி ரெசிபி இதோ!
Crispy Stuffed Green Chili Bajjis: மழைக்காலத்தில் சூடான பக்கோடாக்கள் அனைவருக்கும் பிடித்தமானது. இந்த செய்முறையில், ஸ்டஃப் மிளகாய் பஜ்ஜி (Milagai Bajji) எவ்வாறு செய்வது என்பதை விளக்குகிறோம். கடலை மாவு, பஜ்ஜி மிளகாய், வெங்காயம், மசாலா பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, சுவையான ஸ்டஃபிங்கை தயார் செய்து மிளகாயில் நிரப்பி பொன்னிறமாக பொரிக்க வேண்டும்.

மழைக்காலத்தில் (Monsoon) தேநீருடன் சூடான பக்கோடாக்களை சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. கோடைக்காலம் (Summer) முடிந்து மழை பெய்ய தொடங்கினாலே மாலை நேரத்தில் வீட்டில் ஏதாவது சூடாக சாப்பிட விரும்புவோம். அதன்படி, பனீர், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பல வகையான பஜ்ஜிகளை செய்து ருசிப்போம். அதேநேரத்தில், பலர் மிளகாய் பஜ்ஜியை (Milaka Bajji) ருசிக்க விரும்புவார்கள். இன்று நாங்கள் உங்களுக்கு ஸ்டஃப் மிளகாய் பஜ்ஜியின் ஒரு செய்முறையைச் சொல்லப் போகிறோம். அதை ருசித்த பிறகு, அதன் சுவையை நீங்கள் ஒருபோதும் மறக்க முடியாது.
மிளகாய் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 2 கப்
- பஜ்ஜி மிளகாய் – 4 முதல் 5
- வெங்காயம் – 1 கப்
- கரம் மசாலா – 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- பெங்காயம் – சிறிதளவு
- பேக்கிங் பவுடர் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
ALSO READ: ஜிம் செல்பவர்களுக்கான 6 சத்தான புரத உணவுகள் என்னென்ன? பாரம்பரிய ரெசிபிகள்!
மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி..?
- முதலில் பஜ்ஜி மிளகாயை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இப்போது, ஒரு கத்தியின் உதவியுடன் நடுவில் வெட்டி அனைத்து விதைகளையும் வெளியே எடுக்கவும்.
- இப்போது, ஒரு பாத்திரத்தில் வெங்காயம், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, பெருங்காயம் மற்றும் உப்பு போட்டு நன்கு கலந்து ஸ்டஃபிங்கை தயார் செய்யவும்.
- வெட்டப்பட்ட பஜ்ஜி மிளகாய்க்குள் இந்த ஸ்டபிங்கை நிரப்பவும். மற்றொரு பாத்திரத்தில், கடலை மாவுடன் உப்பு, கஸ்தூரி மேத்தி மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலக்கவும்.
- அடுத்ததாக, அடுப்பை ஆன் செய்து பாத்திரத்தை வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடாகும் வரை மிதமான தீயில் வைக்கவும்.
- இப்போது, ஸ்டஃப் செய்யப்பட்ட பஜ்ஜி மிளகாயை கடலை மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- எண்ணெயில் பஜ்ஜி கருகாத அளவில் சரியான பதத்தில் எடுக்கவும். இப்போது, எல்லா பஜ்ஜி மிளகாயையும் இதே மாதிரியான பதத்தில் எடுக்கவும்.
- அவ்வளவுதான், சுவையான மழைக்கால மிளகாய் பஜ்ஜி ரெடி. இதை கார சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
ALSO READ: ஈவ்னிங் ஸ்நாக்ஸுக்கு சூப்பர் டிஸ்.. காரசாரமான இறால் டிக்கா ரெசிபி இதோ..!




பஜ்ஜி மாவு மீதமிருந்தால் வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், வாழைக்காய், பிரட் போன்றவற்றை நனைத்தும் பஜ்ஜிகளை சுவைக்கலாம். இந்த பஜ்ஜிகள் மிகவும் மொறுமொறுப்பாகவும் சுவையில் அற்புதமாகவும் இருக்கும்.