Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஸ்டீல் பாத்திரங்களை பயன்படுத்துகிறீர்களா? இந்த 5 உணவுகளை தவிருங்கள்!

Kitchen Safety Alert: பெரும்பாலும் நம் வீடுகளில் உலோகங்களால் ஆனா பாத்திரங்களையே சமையலுக்கு பயன்படுத்துகிறோம். அந்த வகையில் ஸ்டீல் பாத்திரங்களில் சில உணவுகளை சேமித்து வைப்பது, உணவின் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கட்டுரையில் ஸ்டீல் பாத்திரங்களில் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.

ஸ்டீல் பாத்திரங்களை பயன்படுத்துகிறீர்களா? இந்த 5 உணவுகளை தவிருங்கள்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 Jul 2025 00:01 AM IST

இந்திய சமையலறைகளில் (Kitchen) எஃகு எனப்படும் ஸ்டீல் (Steel) பாத்திரங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை உறுதியானவை. மேலும் சுத்தம் செய்ய எளிதானவை. பருப்பு வகைகள், ஊறுகாய், என அனைத்தையும் சேமித்து வைக்க ஏற்றது. ஆனால் இவை சில பொருட்களை வைத்திருக்க கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காரணம் சில உணவுகள் (Food) எஃகுடன் வேதியியல் ரீதியாக வினைபுரிகின்றன. அவை காலப்போக்கில் அவற்றின் சுவை, அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை இழக்கக்கூடும். தவறுதலாக கூட ஸ்டீல் பாத்திரங்களில் வைக்கக்கூடாத பொருட்களைப் பார்ப்போம்.

உலர்ந்த பொருட்களை சேமிக்க ஸ்டீல் பாத்திரங்களில் வைக்க மிகவும் நல்லது. இருப்பினும், சில உணவுகளை ஸ்டீல் பாத்திரங்களில் சேமித்து வைப்பது அவற்றைக் கெடுப்பது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எல்லாவற்றையும் ஸ்டீல் பாத்திரங்களில் சேமிக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால், அதை உடனடியாக மாற்றுவது நல்லது. இந்த உலோகத்துடன் இணக்கமான பொருட்களுக்கு மட்டுமே இவற்றைப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், வயிற்று பிரச்னைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த கிண்ணங்களில் பின்வரும் பொருட்களை வைக்க வேண்டாம்.

1. ஊறுகாய்

இந்திய ஊறுகாய்களில் உப்பு, எண்ணெய், எலுமிச்சை, வினிகர் மற்றும் புளி போன்ற பொருட்களிலிருந்து பெறப்படும் இயற்கை அமிலங்கள் அதிகம். இவை உலோகத்துடன், குறிப்பாக தரமற்ற இரும்புகளுடன் வினைபுரியும். இது சுவையை மாற்றி, விரைவில் கெட்டுப்போக காரணமாகிறது. எனவே ஊறுகாயை சேமிக்க கண்ணாடி பாட்டில்கள் நல்ல தேர்வாகும்.

2. தயிர்

தயிர் இயற்கையாகவே புளிப்புச் சுவை கொண்டது.  ஸ்டீல் பாத்திரங்களில், நீண்ட நேரம் சேமித்து வைத்தால் அதன் சுவை மாறலாம். தயிரை பாதுகாப்பதற்கு பீங்கான் அல்லது கண்ணாடி கொள்கலன்களில் சேமிக்கவும். அவை தயிரை குளிர்ச்சியாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கின்றன.

இதையும் படிக்க: இளைஞர்களிடம் அதிகரிக்கும் பக்கவாதம் – செல்போன் பயன்பாடு காரணமா? நிற்கும்..

3. எலுமிச்சை சார்ந்த உணவுகள்

எலுமிச்சை சாதம், எலுமிச்சை சாறு, அல்லது புளி சேர்த்து தயாரிக்கப்பட்ட எந்த உணவையும் ஸ்டீல் பாத்திரத்தில் சேமித்து வைத்தால் அதன் புளிப்புத்தன்மை குறையும். இந்த உணவுகளை கண்ணாடி அல்லது தரமான பிளாஸ்டிக் கொள்கலன்களில் வைத்தால் சுவை நன்றாக இருக்கும். அவை அவற்றின் தன்மையை பாதிக்காது.

4. தக்காளி சேர்க்கப்பட்ட உணவுகள்

பனீர் பட்டர் மசாலா அல்லது ராஜ்மா போன்ற தக்காளி நிறைந்த  ஸ்டில் பாத்திரங்களை தவிர்த்து பிற பாத்திரங்களில் சேமித்து வைப்பது நல்லது. தக்காளியில் இயற்கை அமிலங்கள் உள்ளன. இவை காலப்போக்கில் எஃகுடன் வினைபுரிந்து, உணவின் சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு இரண்டையும் பாதிக்கும். மீதமுள்ள உணவை ஒரு பீங்கான் கிண்ணம் அல்லது கண்ணாடி கொள்கலனில் வைக்கவும்.

5. பழங்கள்

நறுக்கிய பழங்கள் அல்லது சாலட்களை ஸ்டீல் பாத்திரங்களில்  நீண்ட நேரம் வைத்திருந்தால் அதன் மீது சிறிதளவு வினைபுரிகின்றன, குறிப்பாக வாழைப்பழங்கள் அல்லது ஆரஞ்சு போன்ற மென்மையான பழங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். காற்று புகாத கண்ணாடி கொள்கலன்கள் அல்லது பாதுகாப்பான பிளாஸ்டிக் பாக்ஸ்களில் அவற்றை சேமிப்பது நல்லது.