Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Hair Care: வயது ஆக ஆக முடி நரைப்பது ஏன்..? இதை தடுக்க முடியுமா?

Grey Hair Problems: மக்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரைப் போலவே தங்களுக்கும் நரைக்கும் என்று விட்டுவிடுகிறார்கள். இதன் பொருள் ஒரு குடும்பத்தில் ஆரம்பத்தில் நரை முடி தோன்றும் போக்கு இருந்தால், அடுத்த தலைமுறைக்கு அது உருவாக அதிக வாய்ப்புள்ளது. நரை முடி நரைக்கும் வயது வெவ்வேறு இனங்களுக்கு இடையில் மாறுபடும் என்றும் சில ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

Hair Care: வயது ஆக ஆக முடி நரைப்பது ஏன்..? இதை தடுக்க முடியுமா?
நரை முடி பிரச்சனைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Jan 2026 16:05 PM IST

நரை முடி (Grey Hair) என்பது ஒரு இயற்கையாக ஏற்படும் ஒரு செயல்முறையாகும். இருப்பினும், இன்றைய நவீன காலத்தில் டீன் ஏஜ் (Teen Age) வயதினர் கூட இந்த பிரச்சனையை அதிகளவில் எதிர்கொள்கிறார்கள். குறிப்பிட்ட வயதை கடக்கும்போது உடலின் மற்ற பாகங்கள் வயதாகும்போது, ​​நமது தலை முடியும் வயதாக தொடங்கும். தோல் நிபுணர்களின் கூற்றுப்படி, முடியின் நிறத்தை நிர்ணயிக்கும் செல்கள் காலப்போக்கில் பலவீனமடைகின்றன. இதனால் முடி படிப்படியாக அதன் இயற்கையான நிறமான கருப்பை இழந்து, நரை முடி தோற்றத்தை கொடுக்க தொடங்குகிறது. அந்தவகையில், வயதாகும்போது ஏற்படும் நரை முடி பிரச்சனையை தடுக்க முடியுமா என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: அதிகப்படியான முடி உதிர்தல் பிரச்சனையா..? இந்த ஊட்டச்சத்து குறைபாடே காரணம்!

நரை முடி குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன..?

பெரும்பாலானவர்களுக்கு 30 அல்லது 40 வயதிற்குப் பிறகு நரை முடி வரத் தொடங்குகிறது என்று தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மெலனோசைட் ஸ்டெம் செல்கள் பலவீனமடைவதே ஆகும். இவை மெலனின் நிறமியை முடிக்கு வழங்கி, அதற்கு கருப்பு, பழுப்பு நிறத்தை அளிக்கின்றன. இந்த செல்கள் சரியாக செயல்படுவதை நிறுத்தும்போது, ​​முடி வெள்ளையாகவோ அல்லது சாம்பல் நிறமாகவோ மாறத் தொடங்குகிறது.

இந்த முழு செயல்முறையும் மருத்துவ ரீதியாக செல்லுலார் முதுமை என்று அழைக்கப்படுகிறது. இந்த செயல்பாட்டில், முடி படிப்படியாக அதன் நிறமி உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால்தான் முன்பு கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருந்த முடி காலப்போக்கில் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் தோன்றத் தொடங்குகிறது. நரை முடியின் அமைப்பு கரடுமுரடானதாகவோ அல்லது அடர்த்தியாகவோ மாறுவதை பலர் உணர்கிறார்கள். மக்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரைப் போலவே தங்களுக்கும் நரைக்கும் என்று விட்டுவிடுகிறார்கள். இதன் பொருள் ஒரு குடும்பத்தில் ஆரம்பத்தில் நரை முடி தோன்றும் போக்கு இருந்தால், அடுத்த தலைமுறைக்கு அது உருவாக அதிக வாய்ப்புள்ளது. நரை முடி நரைக்கும் வயது வெவ்வேறு இனங்களுக்கு இடையில் மாறுபடும் என்றும் சில ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

ALSO READ: மொட்டை அடித்தால் முடி அடர்த்தியாகுமா..? மருத்துவர் அருண்குமார் விளக்கம்!

இதை நிறுத்த முடியுமா?

ஒரு காலத்தில் நரை முடி தவிர்க்க முடியாதது என்று நம்பப்பட்டது. இருப்பினும், சில விஷயங்களை பின்பற்றுவதன்மூலம் நரைக்கும் பிரச்சனையை மெதுவாக்கலாம். சில ஆய்வுகள் வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளை முன்கூட்டியே நரைப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், நீண்ட நாட்களாக இருக்கும் மன அழுத்தமும் தலைமுடியை நரைக்க செய்யலாம். அதாவது, அதிகப்படியான மன அழுத்தம் முடியில் நிறமி உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்தும். அதன்படி, நரை முடி வருவதை முற்றிலுமாகத் தடுக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினாலும், சீரான உணவு, மன அழுத்தக் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இந்த செயல்முறையை ஓரளவிற்கு மெதுவாக்கலாம் என்று கூறப்படுகிறது.