AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Coconut Storage: தேங்காய் விரைவாக கெட்டுப்போகிறதா..? இப்படி செய்தால் 6 மாதம் வரை ஃப்ரஷாக இருக்கும்!

How to Store Coconuts: தேங்காய் விலை ஏற்ற இறக்கத்தால், அதிக தேங்காய் வாங்கி சேமிப்பது வழக்கம். ஆனால், அழுகுவதைத் தடுப்பது முக்கியம். பழைய தேங்காய்களை விட புதிய தேங்காய்கள் விரைவில் கெட்டுப்போகும். உரித்த தேங்காயை கீழ்ப்பகுதி மேல்நோக்கி வைத்து, அடிக்கடி நகர்த்தக் கூடாது. உடைத்த தேங்காயைத் துணியில் சுற்றி தண்ணீரில் வைக்கலாம் அல்லது உப்பைத் தடவலாம்.

Coconut Storage: தேங்காய் விரைவாக கெட்டுப்போகிறதா..? இப்படி செய்தால் 6 மாதம் வரை ஃப்ரஷாக இருக்கும்!
தேங்காய்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Jun 2025 11:27 AM IST

தேங்காய் (Coconut) விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களாக உள்ளது. இதன்காரணமாக, பலரும் சொந்த ஊர்களில் இருந்தும், கடைகளில் இருந்தும் தேவைக்கு அதிகமாக தேங்காய் வாங்கி தங்கள் வீடுகளில் சேமித்து வைத்திருப்பார்கள். ஆனால், பல நேரங்களில் அதிகமாக வாங்கப்படும் தேங்காய்கள் அழுகி, தூக்கி எறிய வேண்டியிருக்கும். தேங்காய்களில் இரண்டு வகைகள் உள்ளன. அதில், அடர் நிற தேங்காய்கள் பழையவையாகவும், வெளிர் நிற தேங்காய்கள் புதியவையாகவும் இருக்கும். பொதுவாக, பழைய தேங்காய்கள் விரைவாக கெட்டுப்போவதில்லை. ஆனால், புதிய தேங்காய்கள் விரைவாக கெட்டுப்போகும். இந்தநிலையில், தேங்காயை எப்படி கெட்டுப்போகாமல் பாதுகாப்பது..? குளிர்சாதன பெட்டியில் (Fridge) எப்படி வைப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

தேங்காய் கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்யலாம்..?

தேங்காயை உரித்துவிட்டால், அதன் கீழ் பகுதி மேல்நோக்கி இருக்கும் வகையில் வைக்கவும். அதேநேரத்தில் உரித்த தேங்காயை மீண்டும் மீண்டும் தண்ணீர் இருக்கிறதா என்று குலுக்கி பார்ப்பது, ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது போன்ற செயலை செய்ய  வேண்டாம். ஏனென்றால் தேங்காயின் நீர் அதன் மூன்று கண்களை அடிக்கடி தொட தொடங்கினால் தொல்லையாக மாறும். அதாவது, தேங்காயில் உள்ள தண்ணீர் அதன் கண்களை தொட்டால், தேங்காய் விரைவாக அழுக ஆரம்பிக்கும். தேங்காயை இவ்வாறு பாதுகாப்பாக வைத்தால், அது ஆறு மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

உடைத்த தேங்காயை என்ன செய்யலாம்..?

தேங்காயை 2 ஆக உடைத்து அதன் ஒரு பகுதியை பயன்படுத்திவிட்டு, மற்றொரு பகுதியை அப்படியே வைத்தால் ஒன்று காய்ந்துவிடும். அப்படி இல்லையென்றால், கெட்டுப்போக தொடங்கும். உடைத்த தேங்காயில் முதலில் அதன் கடினமான பகுதியை காலி செய்துவிடுங்கள். உங்கள் வீட்டில் பிரிட்ஜ் இல்லையென்றால், உடைந்த தேங்காயை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி, தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் வைக்கவும். இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு மூன்று முறை மாற்ற வேண்டும். இப்படி செய்வதன்மூலம், தேங்காய் குளிர்ச்சி அடைந்து நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். இது தவிர, தேங்காயில் சிறிது உப்பை தடவி பயன்படுத்துவதால் அது விரைவாக கெட்டுப்போவதைத் தடுக்கும்.

பிரிட்ஜில் தேங்காயை எப்படி வைப்பது நல்லது..?

உங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருந்தால், தேங்காயைத் துருவி, காற்று புகாத கொள்கலனில் வைத்து, ஃப்ரீசரில் வைக்கவும். தேங்காய் புதிய தேங்காயாக இருந்தால், அதை தண்ணீர் நிரப்பிய ஒரு எஃகு பாத்திரத்தில் போட்டு, குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். இது தேங்காய் கெட்டுப்போகாமல் தடுக்கும்.

Follow Us