Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kitchen Tips: பாத்திரங்களைக் கழுவும்போது இந்த தவறுகளா? ஆரோக்கியம் பாதிக்கப்படும்!

Kitchen Hygiene Tips: உணவு மற்றும் சமையலறையின் தூய்மை அனைத்தும் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால்தான் சமையலறையை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், சமையல் பாத்திரங்களை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் நம் வீட்டு பெரியவர்கள் அடிக்கடி கூறி வருகிறார்கள்.

Kitchen Tips: பாத்திரங்களைக் கழுவும்போது இந்த தவறுகளா? ஆரோக்கியம் பாதிக்கப்படும்!
பாத்திரம் கழுவுதல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Jan 2026 18:46 PM IST

நமது குடும்பத்தினரின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சமையலறையை (Kitchen) பொறுத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள், பாத்திரங்கள், உணவு மற்றும் சமையலறையின் தூய்மை அனைத்தும் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால்தான் சமையலறையை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், சமையல் பாத்திரங்களை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் நம் வீட்டு பெரியவர்கள் அடிக்கடி கூறி வருகிறார்கள். பொதுவாக, எல்லோரும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக கழுவுகிறோம் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், நம்மை அறியாமல் பாத்திரங்களை (washing dishes) கழுவும் போது, சில தவறுகளை செய்கிறோம். இது ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படியான தவறுகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: குளியலறையில் தவறுதலாக கூட வைக்கக்கூடாத பொருட்கள்.. இவை நோயை உண்டாக்கலாம்..!

பாத்திரங்களைக் கழுவும்போது இந்த தவறுகளைச் செய்யாதீர்கள்:

அதிகமாக சோப்பு பயன்படுத்துதல்:

பலர் செய்யும் முதல் தவறு இதுதான். அதிகமாக சோப்பு பயன்படுத்தினால் பாத்திரங்கள் நன்றாக சுத்தம் செய்யப்படும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இது சரியான அணுகுமுறை அல்ல. அதிகமாக சோப்பு அல்லது சோப்பு திரவத்தைப் பயன்படுத்துவதால் பாத்திரங்களில் ஒரு ரசாயன அடுக்கு உருவாகலாம். இது உணவில் ஒட்டிக்கொண்டால், இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, எப்போதும் தேவையான அளவு சோப்பு மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

சுடுதண்ணீர் பயன்படுத்துதல்:

பலர் பாத்திரங்களை சுத்தம் செய்ய சூடான நீரைப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக, சூடான நீர் பாத்திரங்களை விரைவாக சுத்தம் செய்யும் என்றாலும், பிளாஸ்டிக் அல்லது நான் ஸ்டிக் பாத்திரங்களில் சூடான நீரை கொண்டு கழுவக்கூடாது. ஏனெனில் இது பிளாஸ்டிக்கிலிருந்து தீங்கு விளைவிக்கும் கூறுகளை வெளியிடும். அதேபோல், நான் ஸ்டிக் பாத்திரங்களின் பூச்சுகளையும் சேதப்படுத்தும். இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

ஸ்பாஞ்ச்கள் மற்றும் ஸ்க்ரப்பர்களை முறையாக சுத்தம் செய்யாமல் விடுவது:

ஸ்பாஞ்ச்கள் மற்றும் ஸ்க்ரப்பர்களை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சுத்தம் செய்யப்படாவிட்டால், அவற்றில் பாக்டீரியாக்கள் வளர தொடங்கி பிரச்சனையை தரும். நீங்கள் ஒவ்வொரு முறை பாத்திரங்களை கழுவும்போது, அவை அழுக்காகிவிடும். அதன்படி, ஒவ்வொரு வாரமும் ஸ்பாஞ்சை மாற்றவும். அதேநேரத்தில், ஸ்க்ரப்பர்களை சூடான நீரில் ஊறவைத்து சுத்தம் செய்வதும் முக்கியம்.

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் ஸ்டீல் ஸ்க்ரப் பயன்படுத்துதல்:

பலர் நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களைக் கழுவ ஸ்டீல் ஸ்க்ரப்பரைப் பயன்படுத்துகிறார்கள். இது பூச்சுகளை நீக்குகிறது. இது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களையும் வெளியிடுகிறது. எனவே, நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களை மென்மையான பஞ்சைப் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.

ALSO READ: குளிர்காலத்தில் இந்த காய்கறிகளை ப்ரிட்ஜில் வைக்கிறீர்களா..? அதன் தன்மையை குறைக்கும்!

பாத்திரங்களை அதிக நேரம் சிங்க்கில் போடுதல்:

அழுக்குப் பாத்திரங்களை அதிக நேரம் சிங்க்கில் போடாதீர்கள். அவற்றை அதிக நேரம் அங்கேயே விடுவதால் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொண்டு துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, எப்போதும் சாப்பிட்ட உடனே பாத்திரங்களைக் கழுவுவது நல்லது. இது சமையலறையை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கும்.