Dental Tips: உங்கள் பற்களுக்கு எந்த பல் துலக்கும் பிரஷ் சிறந்தது? விளக்கமளிக்கும் மருத்துவர் ஜனனி ஜெயபால்!
How to Choose a Toothbrush: ஜிக் ஜாக் அல்லது ஏற்ற இறக்கங்களை கொண்ட பல் துலக்கும் பிரஷை தேர்வு செய்ய வேண்டும். ஜிக் ஜாக் வடிவிலான மென்மையான முட்கள் கொண்ட பல் துலக்கும் பிரஷ், பற்களுக்கு இடையில் சிக்கி இருக்கு துகள்களை முழுமையாக வெளியேற்றும். மேலும், இவை உங்கள் பற்களின் ஓரங்களில் பயன்படுத்த எளிதாக இருக்கும்.
நாம் ஒவ்வொரு நாளும் நம் ஆரோக்கியத்திற்கு பல பொருட்களை பயன்படுத்துகிறோம். அதில், முக்கியமானது நாம் அன்றாட பயன்படுத்தும் பல் துலக்கும் பிரஷ். தினமும் பல் (Teeth Care) துலக்குவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நமது பல் துலக்கும் பிரஷின் தரத்தையும், அதை எவ்வளவு காலம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்வது முக்கியம். பெரும்பாலும் பிரஷ் தேய்ந்து போகும்வரை அதை பயன்படுத்துகிறோம். இருப்பினும், பல் துலக்கும் பிரஷை (Tooth Brush) எவ்வளவு காலம் பயன்படுத்த வேண்டும்? எப்படிப்பட்ட பிரஷ் பற்களை பயன்படுத்துவது முழுமையாக சுத்தம் செய்யும் என்பது குறித்து பல் மருத்துவர் ஜனனி ஜெயபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ALSO READ: குளிர் காலத்திலும் உங்களுக்கு அடிக்கடி வாய் புண் வருமா..? காரணத்தை தெரிஞ்சுக்கோங்க..!




ஜிக் ஜாக் வடிவிலான முட்கள் கொண்ட பிரஷ் பயன்படுத்துங்கள்:
View this post on Instagram
ஜிக் ஜாக் அல்லது ஏற்ற இறக்கங்களை கொண்ட பல் துலக்கும் பிரஷை தேர்வு செய்ய வேண்டும். ஜிக் ஜாக் வடிவிலான மென்மையான முட்கள் கொண்ட பல் துலக்கும் பிரஷ், பற்களுக்கு இடையில் சிக்கி இருக்கு துகள்களை முழுமையாக வெளியேற்றும். மேலும், இவை உங்கள் பற்களின் ஓரங்களில் பயன்படுத்த எளிதாக இருக்கும்.
ஒரே வடிவிலான மிகவும் கடினமான பல் துலக்கும் பிரஷ் உங்கள் பற்களை சரியாக சுத்தம் செய்யாமல், துகள்களை அப்படியே விட்டுச்செல்லும். மேலும், கடினமான முட்கள் கொண்ட பிரஷ் உங்கள் ஈறுகளை சேதப்படுத்தலாம்.
V வடிவிலான பிரஷ்:
பல் துலக்கும் பிரஷை வாங்கும்போது, எப்போது U வடிவில் தலைகொண்டதை வாங்காமல், V வடிவிலான பிரஷை வாங்கி பயன்படுத்துங்கள். இந்த வகை பிரஷ் வாயின் மூலைகளை எளிதில் சென்றடையும். இதனால், பற்கள் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.
வளைந்த கழுத்து பகுதி கொண்ட பிரஷ்:
பெரும்பாலானோர்கள் பல் துலக்கும் பிரஷின் கழுத்தின் பகுதி நேராக இருக்கும்படி வாங்குகிறார்கள். இதுவும் தவறான ஒரு விஷயம். நீளமான கைப்பிடி கொண்ட கழுத்து வளைந்த பகுதியுடன் கூடிய பல் துலக்கும் பிரஷ் வாங்கவும். இதை பயன்படுத்துவதன்மூலம், வாயின் பின்பகுதி வரை சென்று முழுமையாக சுத்தம் செய்யும். மேலும், கைப்பிடி நீளமாக இருப்பதால் கையில் இருந்து விலகாமல் இருக்கும்.
ALSO READ: இனிப்பு சாப்பிட்டாலே சொத்தை பல் பயமா..? இதை செய்தால் வராது!
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பிரஷ் மாற்றுவது சரியானது..?
மக்கள் தங்கள் பல் துலக்கும் பிரஷ் முழுமையாக தேய்ந்து போகும்வரை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்வது சில நேரங்களில் ஈறுகளில் இரத்தத்தை வர வைக்கும். இதை லேசாக எடுத்துக்கொள்வது நம் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். மருத்துவர்கள் மற்றும் சமீபத்திய ஆராய்ச்சிகள், ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் உங்கள் பல் துலக்குதலை மாற்ற பரிந்துரைக்கின்றன. இது உங்கள் பற்களை வலுவாக வைத்திருக்கும். மேலும், எந்த பிரச்சனைகளும் வராமல் தடுக்கும்.