விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் இன்று (ஜனவரி 27) சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது, மத்திய தணிக்கை குழு கேட்டுக்கொண்டபடி, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.