Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Teeth Care Tips: அழுத்தி தேய்த்தால் பல் சுத்தமாகுமா? எச்சரிக்கும் மருத்துவர் ஜனனி ஜெயபால்!

Oral Hygiene: நமது பற்களின் ஆரோக்கியத்திற்காக ஒரு நாளைக்கு 2 முறை பல் துலக்குவது மட்டுமல்லாமல், நமது பல் துலக்கும் நுட்பம் சரியானதா இல்லையா என்பதையும் கவனிக்க வேண்டும். பல் துலக்கும்போது, நாம் பல் துலக்கும் பிரஸை 45 டிகிரி கோணத்தில் வைத்து, ஈறுகளுக்கு அடியில் மெதுவாக நகர்த்தி தேய்க்க வேண்டும்.

Teeth Care Tips: அழுத்தி தேய்த்தால் பல் சுத்தமாகுமா? எச்சரிக்கும் மருத்துவர் ஜனனி ஜெயபால்!
பல் துலக்கும் முறைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Nov 2025 20:17 PM IST

நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் சரியான நேரத்தில் சாப்பிடுகிறோமா சரியான நேரத்தில் தூங்குகிறோமா என்பதை பற்றி அக்கறை கொள்கிறோம். ஆனால், யாரும் நாம் சரியான பல் துலக்குகிறோமா என்பதை கருத்தில் கொள்வது கிடையாது. சரியான முறையில் பல் துலக்குவது பற்றி நமக்கு அதிகம் தெரியாது, அதை பற்றி தெரிந்துகொள்ளவும் விரும்புவது கிடையாது. பலரும் பல் துலக்கும்போது, பல் துலக்கும் பிரஸை (Tooth Brush) கொண்டு எவ்வளவு அழுத்தி தேய்க்கிறோமோ, அவ்வளவு வேகமாக நம் பற்கள் (Teeth) சுத்தமாகும் என்று நினைக்கிறார்கள். இதனால், ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படலாம். இருப்பினும், இப்படி பல் துலக்குவது தவறானது என பல் மருத்துவர் ஜனனி ஜெயபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ: வேப்பங்குச்சியால் வாரம் ஒரு முறை.. பற்கள் ஆரோக்கியம் கூடும்!

அழுத்தி பல் துலக்குவதைத் தடுப்பது எப்படி?

  1.  நீங்கள் இடது கை பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் வலது கையையும், வலது கை பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் இடது கையையும் பயன்படுத்துங்கள். இது விசையை வெகுவாகக் குறைக்கும். உங்கள் பற்களில் காயம் ஏற்படாமல் தடுக்கும்.
  2.  ப்ளக்சிபல் பல் துலக்கும் பிரஸை கொண்டு பல் துலக்கலாம். இது விசையை வெகுவாகக் குறைக்கும்.
  3. பல் துலக்கும் பிரஸை பிடிக்க 3 விரல்களை மட்டும் பயன்படுத்தி பற்களை துலக்குங்கள். முழு கையையும் பயன்படுத்தி பல் துலக்கும்போது ஈறுகளில் கீறல் விழலாம்.
  4. பல் விலக்கும் விசையைக் கட்டுப்படுத்த மின்சார பல் துலக்கும் பயன்படுத்தவும்.

சரியான முறையில் பல் துலக்குவது எப்படி..?

நமது பற்களின் ஆரோக்கியத்திற்காக ஒரு நாளைக்கு 2 முறை பல் துலக்குவது மட்டுமல்லாமல், நமது பல் துலக்கும் நுட்பம் சரியானதா இல்லையா என்பதையும் கவனிக்க வேண்டும். பல் துலக்கும்போது, நாம் பல் துலக்கும் பிரஸை 45 டிகிரி கோணத்தில் வைத்து, ஈறுகளுக்கு அடியில் மெதுவாக நகர்த்தி தேய்க்க வேண்டும். பல் துலக்கிய உடனேயே தண்ணீர் குடிப்பது நல்ல யோசனையல்ல. பல் துலக்கியவுடன் பற்களை பாதுகாக்கும் ஃப்ளோரைடு வயிற்றுக்குள் சென்று வீணாகிவிடும்.

ALSO READ: ஈறுகளில் இரத்தப்போக்கு பிரச்சனையா? இது எதனால் ஏற்படுகிறது..?

பலரும் சாப்பிட்டவுடன் பல் துலக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்கள். சாப்பிட்ட பிறகு அல்லது ஏதாவது குடித்த பிறகு குறைந்தது 30 நிமிடங்களுக்கு பல் துலக்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது பற்களின் எனாமலை சேதப்படுத்தும். அதேநேரத்தில், உணவு சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு நிறைய தண்ணீர் குடிப்பது பற்களுக்கு நல்லது. மேலும், காலை உணவுக்கு முன் பல் துலக்குவது மிகவும் முக்கியம். அதேசமயம் ஆரோக்கியமான பற்களுக்கும், அனைவரும் குறைந்தது 2 நிமிடங்களாவது பல் துலப்பது நல்லது.