Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bleeding Gum: ஈறுகளில் இரத்தப்போக்கு பிரச்சனையா? இது எதனால் ஏற்படுகிறது..?

Bleeding Gum Causes: ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு (Bleeding gums) பிரச்சனையை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. இதை சரியான நேரத்தில் கவனிப்பதும் முக்கியம். உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் இருந்து தொடர்ந்து இரத்தப்போக்கு பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

Bleeding Gum: ஈறுகளில் இரத்தப்போக்கு பிரச்சனையா? இது எதனால் ஏற்படுகிறது..?
ஈறுகளில் இரத்தப்போக்குImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Nov 2025 15:57 PM IST

பலரும் பல சந்தர்ப்பங்களில் பல் துலக்கும் போது (Brushing) ஈறுகளில் இருந்து இரத்தம் வெளியேறும் பிரச்சனையை சந்திப்போம். பெரும்பாலான நேரங்களில், இந்த பிரச்சனைகளை நாம் சிறிய பிரச்சனையாக கருதி புறக்கணிக்க தொடங்குகிறோம். அதன்படி, ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு (Bleeding gums) பிரச்சனையை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. இதை சரியான நேரத்தில் கவனிப்பதும் முக்கியம். உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் இருந்து தொடர்ந்து இரத்தப்போக்கு பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இந்தநிலையில், பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்தம் வந்தால், அது எதனால் ஏற்படுகிறது என்ற காரணத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: வேப்பங்குச்சியால் வாரம் ஒரு முறை.. பற்கள் ஆரோக்கியம் கூடும்!

ஈறுகளில் இரத்தம் வருவதற்கான காரணம் என்ன..?

  • வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற 2 வைட்டமின்களும் உடலில் குறைவாக இருந்தால், ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படலாம். பலரும் அதிகமாக அழுத்தி தேய்த்து நீண்ட நேரம் பல் துலக்குகிறார்கள். இந்தப் பழக்கம் உங்களுக்கு இருந்தாலும், ஈறுகளில் இருந்து இரத்தம் வரலாம்.
  • உங்கள் பற்களுடன் சேர்த்து ஈறுகளையும் சுத்தம் செய்வது முக்கியம். இருப்பினும், இதற்கு நீங்கள் பிரஷ் கொண்டு செய்தால், அது இரத்தப்போக்கு ஏற்படுத்தும். அதற்கு பதிலாக உங்கள் விரல்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் ஈறுகளில் ஒருபோதும் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். ஏனெனில், இது இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.
  • உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது இரத்தக் கோளாறு இருந்தால், பல் துலக்கும்போது ஈறுகளில் இருந்து இரத்தம் வரக்கூடும். உங்கள் வாயின் உட்புறத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால், உங்கள் ஈறுகளில் பாக்டீரியாக்கள் வளரக்கூடும். இது இரத்தப்போக்கையும் ஏற்படுத்தும்.
  • சில நேரங்களில், நீண்ட நாட்கள் மருந்து எடுத்துக் கொண்ட பிறகும், ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படும். குறுகிய காலம் மருந்து எடுத்துக் கொண்ட பிறகும், அதன் எதிர்வினையாக இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.
  • நமது உடலில் ஹார்மோன்கள் சுரப்பதில் பல்வேறு நிலைகளில் மாறுபாடுகள் மற்றும் சிக்கல்கள் இருக்கலாம். இது ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.

ALSO READ: பல் ஆரோக்கியத்தை அழிக்கும் பழக்கவழக்கங்கள்.. இவற்றை தவிர்ப்பது நல்லது..!

  • பலர் பற்களின் சரியான வடிவத்தைப் பராமரிக்க பிரேஸ்கள் அல்லது கிளிப்புகளை அணிவார்கள். இவை சரியாக அமைக்கப்படாவிட்டால், இவை ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் துளையிடலை ஏற்படுத்தும். எனவே இது குறித்து கவனமாக இருப்பது அவசியம், மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெறுவது முக்கியம்.
  • ஈறுகளில் தொற்று ஏற்பட்டால், இவை வீக்கமடையக்கூடும். உங்களுக்கு கடுமையான வலி ஏற்படலாம். உங்கள் ஈறுகளில் இரத்தம் வரவும் வாய்ப்புள்ளது. எனவே, அவற்றை முறையாகப் பராமரிப்பது மிகவும் முக்கியம்.