Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tooth Care Tips: பல் பிடுங்கிய பிறகு என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது..? பராமரிப்பு குறிப்புகள்!

Tooth Extraction Aftercare Tips: பல் பிடுங்கிய பிறகு, பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் முறையாக பல் பிடுங்கிய பிறகு, கவனிக்காமல் விட்டால் தொற்று, நீடித்த இரத்தப்போக்கு, வீக்கம், வலி ​​மற்றும் சில நேரங்களில் நரம்புகள் அல்லது வேர்களுக்கு காயம் போன்றவை ஏற்படலாம்.

Tooth Care Tips: பல் பிடுங்கிய பிறகு என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது..? பராமரிப்பு குறிப்புகள்!
பல் பிடுங்குதல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Nov 2025 18:53 PM IST

பற்களை (Tooth) சரியாக பராமரிக்காததால், பல் சொத்தை மற்றும் குழிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். சில நேரங்களில் பற்கள் சொத்தையாகி, பற்களை பிடுங்க வேண்டிய சூழல் உண்டாகும். பல் பிடுங்குவதில் பல நன்மைகள் உள்ளன. முதலாவதாக, இது வாய்வழி தொற்று மற்றும் வலியைக் குறைக்கிறது. ஒரு சிதைந்த அல்லது பலவீனமான பல் சுற்றியுள்ள பற்களையும் பாதிக்கலாம், அவற்றை அகற்றுவதன் மூலம் முழு வாயின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இதுபோன்ற சூழ்நிலையில், பற்களை பிடுங்கிய பிறகு, வாய் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது மிகவும் முக்கியம். அப்போதுதான் பல்லில் வலி குறைந்து, குணமடைதலும் வேகமாக நடைபெறும்.

பல் பிடுங்கிய பிறகு, பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் முறையாக பல் பிடுங்கிய பிறகு, கவனிக்காமல் விட்டால் தொற்று, நீடித்த இரத்தப்போக்கு, வீக்கம், வலி ​​மற்றும் சில நேரங்களில் நரம்புகள் அல்லது வேர்களுக்கு காயம் போன்றவை ஏற்படலாம்.

ALSO READ: நீண்ட நாட்களாக ஒரே டூத் பிரஷ்..? ஏன் உடனடியாக மாற்றவது முக்கியம்..?

பல் பிரித்தெடுத்த பிறகு கவனிக்க வேண்டிய சில விஷயம்:

  • பல் பிரித்தெடுத்த பிறகு சரியான பராமரிப்பு விரைவாக குணமடைய உதவும். பல் பிரித்தெடுத்த பிறகு சிறிது நேரம் லேசான இரத்தப்போக்கு ஏற்படுவது இயல்பானது, எனவே பஞ்சு உருண்டையை அழுத்தி வைக்கவும். முதல் 24 மணி நேரத்திற்கு வெந்நீர் அல்லது வாய் கொப்பளிப்பதைத் தவிர்க்கவும்.
  • சூடான அல்லது காரமான உணவுகளுக்குப் பதிலாக மென்மையான மற்றும் சாதுவான உணவை உண்ணுங்கள். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இவை காயத்தை பாதிக்கும்.
  • வலி அல்லது வீக்கம் ஏற்பட்டால், உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணியைப் பயன்படுத்துங்கள். காயத்தின் மீது நேரடியாக பல் துலக்க வேண்டாம். இது சிரமமாக இருந்தால் மவுத்வாஷைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். இந்த நேரத்தில் உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது மிக முக்கியம்.

ALSO READ: பல் ஆரோக்கியத்தை அழிக்கும் பழக்கவழக்கங்கள்.. இவற்றை தவிர்ப்பது நல்லது..!

  • பல் பிடுங்கிய பிறகு உடனே பல் துலக்க முடியாவிட்டால், முதல் 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3 முறை வாய் கொப்பளிக்கலாம். முடிந்தால், ஒவ்வொரு உணவிற்கு பிறகு உங்களை வாயை கொப்பளிக்கலாம். மிக முக்கியமாக, பல் பிடுங்கிய பிறகு உடனே சாப்பிடுவதையோ அல்லது அமிலத்தன்மை கொண்ட எதையும் வாயில் போடக்கூடாது.

என்ன சாப்பிடலாம்..?

பல் பிடுங்கிய பிறகு வேசான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அதன்படி, காரமான உணவுகளை தவிர்க்கவும். இந்த வகை உணவுமுறை மருந்துகளின் செயல்திறனை குறைக்கும் என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர். பல் பிடுங்கி முதல் 2 முதல் 3 நாட்களுக்கு முட்டை, தயிர் உள்ளிட்ட லேசான உணவுகளை எடுத்து கொள்ளலாம்.