ஈரானில் சமீபத்தில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தங்கள்மீது எந்தவித தாக்குதல் ஏற்பட்டாலும் பதிலளிக்க “முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தயாராக உள்ளோம்” என ஈரான் அறிவித்துள்ளது என்று அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. டெஹ்ரானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஈரான் வெளியுறவுத் துறை பேச்சாளர் எஸ்மாயில் பாகாயி, தற்போதைய சூழலை “கலப்பு போர்” என விவரித்தார். கடந்த ஜூனில் நடந்த 12 நாள் போரும், சமீபத்திய வன்முறை போராட்டங்களும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூண்டியவை என அவர் குற்றம்சாட்டினார்.