லாக்டவுன் முதல் காந்தி டால்க்ஸ் வரை… நாளை ஜனவரி 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ
Theatre Release Movies List: தமிழ் சினிமாவில் நாளை 30ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படங்கள் என்னென்ன என்பது குறித்தும் அதில் நடித்துள்ள நடிகர்கள் குறித்தும் தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
லாக்டவுன்: இயக்குநர் ஏஆர் ஜீவா எழுதி இயக்கி தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் லாக்டவுன். இந்தப் படத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் (Actress Anupama Pareswaran) நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பலப் படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா பரமேசுவரன் நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த லாக்டவுன் படத்திலும் அனுபமா பரமேசுவரன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முன்னதாக திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பிறகு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வெளியீட்டு தேதியை அறிவித்தது. அதன்படி படம் நாளை 30-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்லிசை: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் கிஷோர். தொடர்ந்து சிறப்பு கதாப்பாத்திரம், வில்லன் என நடித்து வந்த நடிகர் கிஷோர் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் மெல்லிசை. இந்தப் படத்தை இயக்குநர் தீரவ் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படம் அப்பா – மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள நிலையில் படம் நாளை 30-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பல்சர்: தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் அட்டக்கத்தி தினேஷ். இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கருப்பு பல்சர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் முரளி கிருஷ் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அட்டக்கத்தி தினேஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் நாளை 30-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




காந்தி டால்க்ஸ்: தமிழ் சினிமாவில் வசனமே இல்லாமல் மௌனப் படமாக உருவாகி உள்ளது காந்தி டால்ஸ். நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த சாமி மற்றும் அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் கிஷோர் பாண்டுரங் இயக்கி உள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் நாளை 30-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… KS. Ravikumar: அந்த படம் சிம்பு கூட பண்ணமாட்டேனு சொல்லிட்டேன் – கே எஸ்.ரவிக்குமார் உடைத்த உண்மை!