Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

KS. Ravikumar: அந்த படம் சிம்பு கூட பண்ணமாட்டேனு சொல்லிட்டேன் – கே எஸ்.ரவிக்குமார் உடைத்த உண்மை!

K.S. Ravikumar About Saravanaa Shooting Experiences: 90ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் சிறந்த இயக்குநராக இருந்துவந்தவர் கே.எஸ். ரவிக்குமார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சிலம்பரசன் வரை பல நடிகர்களுடன் இணைந்து படங்களை இயக்கியுள்ளார். முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய கே.எஸ். ரவிக்குமார், ஷூட்டிங்கிற்கு சிலம்பரசன் தாமதமாக வருவது குறித்து தெரிவித்துள்ளார்.

KS. Ravikumar: அந்த படம் சிம்பு கூட பண்ணமாட்டேனு சொல்லிட்டேன் – கே எஸ்.ரவிக்குமார் உடைத்த உண்மை!
சிலம்பரசன் மற்றும் கே.எஸ். ரவிக்குமார்Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 29 Jan 2026 08:32 AM IST

சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்துவருபவர் கே.எஸ்.ரவிக்குமார் (KS. Ravikumar). இவர் 90ஸ் காலகட்டத்தில் பல படங்களை இயக்கி மக்களிடையே பிரபலமாகியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth), கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் மட்டுமே இவர் கிட்டத்தட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிலம்பரசன் (Silambarasan), சூர்யா (Suriya)உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த விதத்தில் இவர் தற்போது சினிமாவில் படங்களை இயக்குவதை தவிர்த்து. படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் வெளியான படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.

கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் “சரவணா” (Saravanaa) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கின்போது சிலம்பரசன் தாமதமாக வருவது குறித்தும், அவர் அதை எவ்வாறு சமாளித்தார் என்பது குறித்தும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் வெளிப்டையாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அது மிகவும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது – காந்தா பட நடிகை பேச்சு!

தனது புது படம் குறித்து சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

சிலம்பரசன் ஷூட்டிங்கிற்கு தாமதமாக வருவது குறித்து மனம் திறந்தது கே.எஸ்.ரவிக்குமார்:

அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அதில் “சிம்புவை பத்தி பலரும் சொல்லுவாங்க அவர் சரியாக ஷூட்டிங் வரமாட்டாருனு. நம்ம எப்படி அவரிடம் வேலை வாங்கணும், அவரிடம் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். என்னோட பட ஷூட்டிங்கில் முதல் 2 நாள் ரொம்பவே லேட்டா வந்தாரு. நான் இதை கவனிச்சிட்டே இருந்தேன். பின் 3வது நாளில் சிம்புவிடம் சொன்னேன், இந்த மாதிரி நான் படத்திலிருந்து விலகுகிறேன், இப்படி தினமும் தாமதமாக வந்தால் ஷூட்டிங் முடிக்கமுடியாதுனு சொல்லிட்டேன். உடனே சிம்பு, “என்ன சார் ஆச்சி” கேட்டாரு.

இதையும் படிங்க: தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்… ஜன நாயகன் படக்குழு எடுக்கப்போகும் முடிவு என்ன – வைரலாகும் தகவல்

நான் சிம்புவை மிரட்டுவதற்காக மட்டுமே அப்படி சொன்னேன். அப்போது சிம்புவிடம் நான், காலை 7 மணிமுதல் ஒரு காட்சியை எடுப்பதற்காக ஷாட் வைத்துக் கொண்டு நான் நிற்கிறேன், நீங்க உங்க இஷ்டம்போல தாமதமாக வாரிங்க, நீங்க எப்போ வருவீங்கன்னு சரியாக சொல்லுங்கன்னு சொல்லிட்டேன். அவருக்கு நைட் ஷூட்டிங்-னா எவ்ளோ நேரம் நாளும் இருப்பாரு. அவரிடம் அதை சொல்லியபிறகு, உடனே சிம்பு அடுத்த நாளிலிருந்து அவர் எப்போது வருவாருனு சரியான டைமை சொல்லிட்டுதான் போவாரு” என அவர் அதில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.