Bhagyashri Borse: அது மிகவும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது – காந்தா பட நடிகை பேச்சு!
Bhagyashri Borse About Kanthaa Movie Box Office Failure: தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் காந்தா படம் ஏமாற்றத்தைக் கொடுத்தாக மனம் திறந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகி மக்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் காந்தா (Kaantha). இந்த படத்தில் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்க, துல்கர் சல்மான் (Dulquer Salmaan) மற்றும் ராணா (Rana) இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse). இந்த படத்தின் மூலமாக பாக்யஸ்ரீ போஸ்ற் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தார். இந்த படமானது கடந்த 2025 நவம்பர் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது உண்மை கதையை மையமாக கொண்டு தயாராகியிருந்தது.
இதில் நடிகர்கள் ராணா, சமுத்திரக்கனி (Samuthirakani), காயத்ரி (Gayathri) உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல்ஒன்றில் பேசிய இப்படத்தின் நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ், இதன் தோல்வி குறித்து மனம் திறந்துள்ளார்.




இதையும் படிங்க: தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்… ஜன நாயகன் படக்குழு எடுக்கப்போகும் முடிவு என்ன – வைரலாகும் தகவல்
காந்தா பட பாக்ஸ் ஆபிஸ் தோல்வி குறித்து மனம் திறந்த பாக்யஸ்ரீ போர்ஸ்:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் அதில், “ஒரு திரைப்படம் பாராட்டப்பட்டு, பின் அது பாகசாபிசில் சரியாக போகாதது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது” என்று அவர் அதில் பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்ட. வருகிறது
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் வெளியிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் காந்தா படம் மூலம் அறிமுகமான நிலையில், மேலும் இவர் நடிகர் தனுஷுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. மேலும் இவர் தெலுங்கில் நடிகர் அகில் நடிப்பில் தயாராகியுள்ள லெனின் என்ற படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: 7 வருடங்களுக்குப் பிறகு இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் என்.ஜி.கே படத்தின் டெஸ்ட் ஷூட் வீடியோ
இப்படம் வரும் 2026 மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களில் கதாநாயகியாகவும் புது புது படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். காந்தா படத்திற்கு பிறகே தமிழில் இவருக்கு வரவேற்புகள் இருக்கும் நிலையில், மேலும் தமிழிலும் புதிய படங்களில் நடிப்பதற்காக பாக்யஸ்ரீ போர்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.