Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

7 வருடங்களுக்குப் பிறகு இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் என்.ஜி.கே படத்தின் டெஸ்ட் ஷூட் வீடியோ

NGK Movie Test Shoot Video: நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் என்.ஜி.கே. இந்தப் படத்திற்கு முன்னதாக எடுத்த டெஸ்ட் ஷூட் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

7 வருடங்களுக்குப் பிறகு இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் என்.ஜி.கே படத்தின் டெஸ்ட் ஷூட் வீடியோ
என்.ஜி.கேImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jan 2026 12:05 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 31-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் என்.ஜி.கே. பொலிட்டிகள் ஆக்‌ஷன் படமாக வெளியான இந்தப் படத்தை இயக்குநர் செல்வராகவன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், தேவராஜ், பொன்வண்ணன், நிழல்கள் ரவி, உமா பத்மநாபன், ராஜ்குமார், இளவரசு, பாலா சிங், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், கோபி கண்ணதாசன், சதீஷ், சாந்தி மணி, கம்பம் மீனா செல்லமுத்து, கார்த்திகை செல்வன், முத்தழகன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு படம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் என்.ஜி.கே படத்தின் டெஸ்ட் ஷூட் வீடியோ:

இந்தப் படம் பொலிட்டிகள் ட்ராமா பாணியில் உருவாகி இருந்தது. மேலும் இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து இந்தப் படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்குப் பிறகு என்.ஜி.கே படத்தின் டெஸ்ட் ஷூட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இதனை ரசிகர்கள் அதிக அளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read… ரூட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

இணையத்தில் வைராகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தனது 367-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் மோகன்லால் – வைரலாகும் பதிவு