Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் கிங் படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது மாஸ் அப்டேட்

Shah Rukh Khan King Movie Release Date: பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் கிங். இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் கிங் படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது மாஸ் அப்டேட்
கிங்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jan 2026 17:37 PM IST

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களிடையே அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவரது நடிப்பில் பாலிவுட் சினிமாவில் படங்கள் வெளியானாலும் அது பான் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இறுதியாக கடந்த 2023-ம் ஆண்டில் தான் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி அந்த 2023-ம் ஆண்டில் மட்டும் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதில் ஒரு படத்தில் நடிகர் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகர் ஷாருக்கான் நடிப்பில் எந்தப் படமும் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்திற்காக ஷாருக்கான் தேசிய விருதை வென்றார். இதுதான் ஷாருக்கான் வாங்கிய முதல் தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் ஜவான் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றதை நினைத்து ஷாருக்கான் நெகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் தற்போது நடித்து வரும் கிங் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஷாருக்கானின் கிங் படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் தற்போது நடித்துவரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் தான் கிங். இந்தப் படத்தை இயக்குநர் சித்தார்த் ஆனந்த் எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து நடிகர்கள் சுஹானா கான், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப், அர்ஷத் வர்சி, ராணி முகர்ஜி, ராகவ் ஜூயல், அபய் வர்மா, சௌரப் சுக்லா, ஜெய்தீப் அஹ்லாவத், எஸ்.ஜே. சூர்யா, கரண்வீர் மல்ஹோத்ரா என பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் வருகின்ற 24-ம் தேதி டிசம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக நடிகர் ஷாருக்கான் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read… Jana Nayagan: தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட இறுதித் தீர்ப்பு எப்போது இருக்கும்?

நடிகர் ஷாருக்கான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சிம்புக்கு நோ.. சிவகார்த்திகேயனுக்கு எஸ்.. SK-வுடன் புது படத்தில் இணையும் பார்க்கிங் பட இயக்குநர்?