கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணையும் பிரபல நடிகை… யார் தெரியுமா?
Kavin 09 Movie Update: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் நடிகர் கவின். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கவின் நடிப்பில் உருவாக உள்ள படத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலமாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமாகவும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் கவின். இவர் சின்னத்திரையில் இருக்கும் போதே தமிழக மக்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர் நாயகனாக அறிமுகம் ஆன படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அதனைத் தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கியது. அதன்படி லிஃப் படத்தில் தொடங்கி இறுதியாக வெளியான மாஸ்க் படம் வரை அனைத்தும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அதன்படி நடிகர் கவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான லிஃப்ட், டாடா, ஸ்டார் ப்ளடி பெக்கர், கிஸ் மற்றும் மாஸ்க் என அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் அடுத்தடுத்து ஹாய் மற்றும் கவின் 09 படங்கள் உருவாகி வருகிறது. அதில் குறிப்பாகா ஹாய் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வரும் நிலையில் அவரது 09-வது படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.




கவின் படத்தில் இணையும் நடிகை சிம்ரன்:
இந்த நிலையில் நடிகர் கவினின் 9-வது படம் குறித்த அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. பிக்பாஸில் கவினுடன் விளையாடி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற சாண்டியும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல நடிகை சிம்ரன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சிம்ரன் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பழம்பெரும் பாடகி எஸ். ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா காலமானார்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
— #Kavin is currently acting in #KAVIN09, directed by #KenRoyson. #PriyankaMohan plays the female lead opposite him in this film. #Sandy Master is also playing an important role.
— Now, reports have emerged that #Simran has joined the cast. Scenes involving her were filmed over… pic.twitter.com/xIzoReMllL— Movie Tamil (@_MovieTamil) January 22, 2026
Also Read… பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க… நண்பர்கள் குறித்து நெகிழ்ந்து பேசிய ரஜினிகாந்த்