பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க… நண்பர்கள் குறித்து நெகிழ்ந்து பேசிய ரஜினிகாந்த்
Rajinikanth talks about Friednship: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு தனது நண்பர்கள் எவ்வளவு உதவி செய்தார்கள் என்று பல முறை கூறியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நட்பு குறித்து ரஜினிகாந்த் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நாயகன்களின் வில்லனாக கலக்கி வந்தார். தொடர்ந்து வில்லனாக நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகந்த் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி சினிமாவில் கமல் ஹாசன் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அறிமுகம ஆன நடிகர் ரஜினிகாந்த் பிற்காலத்தில் கமல்ஹாசனா – ரஜினிகாந்தா என்ற போட்டி ஏற்படும் அளவிற்கு தன்னை உயர்த்திக் கொண்டார். பிறகு இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் போட்டிப்போட்டு நடிக்கத் தொடங்கினர். மேலும் தமிழ் சினிமாவில் அடையாளமாக இவர்கள் மாறியதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி இருந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் வந்து 50 ஆண்டுகளைக் கடந்தது. இதனை சினிமா துறையில் உள்ளவர்களும் ரசிகர்களும் கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் எந்தவித பின்புலனும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் இந்த இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பதற்காக தனது நண்பர்கள் எப்படி எல்லாம் உதவினார்கள் என்பது குறித்து பலமுறை பேசியிருப்பார். இப்படி இருக்கும் சூழலில் சமீபத்தில் நட்பு குறித்து ரஜினிகாந்த் பேசியது கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நண்பர்கள் குறித்து நெகிழ்ந்து பேசிய ரஜினிகாந்த்:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை பொன்விழா சந்திப்பில் காணொலி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதில் வயதாக ஆக நண்பர்கள் மிகவும் முக்கியமானவர்கள். மக்கள் என்னை எப்படி அழைத்தாலும் சரி (ஐயா, தாத்தா, மாமா), நண்பர்கள் ‘டேய், இங்க வாடா’ என்று அழைப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் பெயர் சிவாஜி என்பதை நான் மறந்துவிட்டேன். என் நண்பர்களுடன் இருக்கும்போதுதான் என் பெயரை எனக்கு அவர்கள் நினைவூட்டுகிறார்கள். அவர்கள் என்னை சிவாஜி என்று அழைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.




Also Read… பர்த்டே பாய் சுந்தர் சி இயக்கத்தில் ரசிகர்கள் கொண்டாடிய படங்கள் – லிஸ்ட் இதோ
மேலும் படங்களில் நடிப்பது எவ்வளவு பிசியாக இருந்தாலும் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது என் நண்பர்களைப் பார்த்துவிடுவேன். இப்படி நண்பர்களை சந்தித்து பேசுவது குறித்து வெளிப்படையாக ரஜினிகாந்த் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிரபல மலையாள இயக்குநரை புகழ்ந்து பேசிய இயக்குநர் சுதா கொங்கரா – வைரலாகும் வீடியோ!