பர்த்டே பாய் சுந்தர் சி இயக்கத்தில் ரசிகர்கள் கொண்டாடிய படங்கள் – லிஸ்ட் இதோ
Director Sundar C Hit Movies List: தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குநர் என பண்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் சுந்தர் சி. இவர் இன்று தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் ஹிட் அடித்தப் படங்களை தற்போது பார்க்கலாம்.
முறை மாமன்: தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் மணிவண்ணன். இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சுந்தர் சி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான முறை மாமன் என்ற படத்தின் மூலம் சுந்தர் சி இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயராம்,
குஷ்பு, கவுண்டமணி, மனோரமா, சங்கீதா, ஜெய் கணேஷ், செந்தில், கசான் கான், வினு சக்கரவர்த்தி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் சுந்தர் சி இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி: கடந்த 1996-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அடுத்தடுத்து உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி என இரண்டு படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களிலேயும் நடிகர் கார்த்திதான் நாயகனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




அருணாச்சலம்: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் அருணாச்சலம். நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இது நடிகர் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அன்பே சிவம்: நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் அன்பே சிவம். இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கி இருந்தார். அன்பு தான் எல்லாம் என்று எடுக்கப்பட்ட இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தற்போது ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… நடிகை அசினின் 10-வது திருமண நாள்… கணவர் பகிர்ந்த எக்ஸ்குளூசிவ் திருமணப் புகைப்படம்
சுந்தர் சி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
King of Comedies, who’s been delivering blockbusters for three decades straight 🔥
Happy birthday, #SundarC sir – unmatched longevity… Unreal aura ❤️
And… we know what you’re waiting for… The time is 6 PM ⏳ We’ve got more for you coming… #HBDSundarC… pic.twitter.com/IKZeurRgDC
— Avni Cinemax (@AvniCinemax_) January 21, 2026
Also Read… இரண்டாவது குழந்தைக்கு வெய்டிங்… மீண்டும் கர்ப்பமாக இருக்கும் அட்லீ – ப்ரியா தம்பதி!