Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஷால் – சுந்தர் சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக், புரோமோ ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Vishal and Sundar C Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால் மற்றும் முன்னணி இயக்குநராக இருக்கும் இயக்குநர் சுந்தர் சி இருவரும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரோமோவ் வீடியோ எப்போது வெளியாகும் என்பது குறித்து பார்க்கலாம்.

விஷால் – சுந்தர் சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக், புரோமோ ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
விஷால் - சுந்தர் சிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Jan 2026 20:41 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியான படம் மத கஜ ராஜா. இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கி இருந்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பல பிரச்சனைகள் காரணமாக வெளியாகாமல் இருந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மத கஜ ராஜா படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் புதிதகா வெளியான படங்களைப் பின்னுக்குத்தள்ளி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி கிடப்பில் இருக்கும் பலப் படங்களுக்கு உந்துதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் சூழலில் நடிகர் விஷால் அடுத்ததாக மகுடம் என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தை முன்னதாக வேறு ஒரு இயக்குநர் இயக்கி வந்த நிலையில் இடையில் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக அந்தப் படத்தை விஷாலே இயக்க முன்வந்தார். இந்தப் படத்தின் மூலம் விஷால் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் இயக்குநர் சுந்தர் சி உடன் கூட்டணி வைத்துள்ளார்.

விஷால் – சுந்தர் சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக், புரோமோ ரிலீஸ் எப்போது:

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வெற்றிக் கூட்டணியாக உள்ள விஷால் மற்றும் சுந்தர் சி இருவரும் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக முன்பே சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் இயக்குநர் சுந்தர் சி, நடிகர் விஷால் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற 21-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரோமோ வீடியோ வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Theri Re-release: மீண்டும் வந்த விஜய் குமார் ஐ.பி.எஸ்… கவனம் பெரும் ‘தெறி’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிரதீப் ஆண்டனிக்கு நோ… கம்ருதின், பார்வதிக்கு யெஸ்… பிக்பாஸில் ரெட் கார்ட் வாங்கிய போட்டியாளர்கள் குறித்து பேசும் நெட்டிசன்கள்