Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Keerthy Suresh: மீண்டும் பாலிவுட் பக்கம் திரும்பிய கீர்த்தி சுரேஷ்.. அட இந்த நடிகருக்கு ஜோடியாகவா?

Keerthy Suresh Returns To Bollywood : நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் மேலும் பல்வேறு மொழிகளிலும் நடித்துவரும் நிலையில், இவர் இந்தியில் நடிக்கவுள்ள புது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் யாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது குறித்து பார்க்கலாம்.

Keerthy Suresh: மீண்டும் பாலிவுட் பக்கம் திரும்பிய கீர்த்தி சுரேஷ்.. அட இந்த நடிகருக்கு ஜோடியாகவா?
கீர்த்தி சுரேஷ்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Jan 2026 17:14 PM IST

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என் பல்வேறு மொழி படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான பேபி ஜான் (Baby Jhon) என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படமானது தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் வெளியான தெறி (Theri) திரைப்படத்தின் இந்தி ரீமேக் திரைப்படமாகும். இந்த படத்தை இயக்குநர் கலீஷ் இயக்க, அட்லீ தயாரித்திருந்தார். இப்படத்தில் நடிகர் வருண் தவானுக்கு (Varun Dhawan) ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

இப்படம் மூலம் இந்தி சினிமாவில் நடிகையாக நுழைந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு புது இந்தி படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ’உங்களுக்கு வெறுப்பு’ – ரஹ்மானை குற்றம்சாட்டிய கங்கனா ரனாவத்.. என்ன நடந்தது?

மீண்டும் இந்தி சினிமாவில் நுழையும் கீர்த்தி சுரேஷ்:

நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியான முதல் இந்தி படமானது தோல்வியை சந்தித்திருந்தது. இந்த படத்தை அடுத்து கிட்டத்தட்ட 1 ஆண்டுகாலமாக எந்த இந்தி படங்களிலும் இவர் ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில் தற்போது புதிதாக இந்தி மொழி படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் நடிகர் டைகர் ஷ்ராஃப் (Tiger Shroff) மற்றும் வித்யுத் ஜாம்வால் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவரா? இணையத்தில் கசிந்தது தகவல்

இப்படத்தில் நடிகர் டைகர் ஷ்ராஃப்பிற்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகி அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு :

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் ரௌடி ஜனார்தனா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த படமானது சுமார் ரூ 300 கோடி பட்ஜெட்டில் தயாராகிவருவதாக கூறப்படும் நிலையில், இந்த 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்தாக மலையாளத்தில் தோட்டம் என்ற திரில்லர் படத்திலும் இவர் நடித்துவருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். திருமணத்திற்கு பின் இவர் திரைப்படங்களில் அதிகமாகவே நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.