Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Keerthy Suresh: தோழியின் திருமணத்தில் தசரா பட பாடலுக்கு நடனமாடிய கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ!

Keerthy Suresh Viral Dance: தென்னிந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தோழி ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், அதில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Keerthy Suresh: தோழியின் திருமணத்தில் தசரா பட பாடலுக்கு நடனமாடிய கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ!
கீர்த்தி சுரேஷ்.Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Dec 2025 20:34 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh) தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் மலையாள சினிமாவின் மூலமாக நடிகையாக நுழைந்திருந்தாலும், இவருக்கு தமிழ் மற்றும் தெலுகு மொழிகளில் பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு (Thalapathy Vijay) ஜோடியாக பைரவா மற்றும் சர்க்கார் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். இவர் தற்போது நாயகியை மையப்படுத்தி உருவாகும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் சமீபத்தில் ரிவால்வர் ரீட்டா (Revolver Rita) என்ற படமானது வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இவரின் கைவசத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என 3 மொழிகளிலும் படங்கள் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. அது என்னவென்றால், நடிகர் கார்த்தி சுரேஷ் தனது தோழியின் திருமணத்தில், அவர் நடித்திருந்த தசரா (Dhasara) படத்தில் இடம்பெற்றிருந்த “சம்கீலா அஞ்சீலேசி” என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிற்து.

இதையும் படிங்க: 2025ல் திருமணம் செய்துகொண்ட தமிழ் பிரபலங்கள் யார் யார்?

கீர்த்தி சுரேஷின் நடனம் தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு :

தனது தோழியின் திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவரான ஆன்டனி தட்டிலுடன் இணைந்து கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் நடனமாடி கொண்டாடியிருந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷும் அவரின் நடிப்பில் வெளியான தசரா என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ஒன்றிற்கு நடனமாடியிருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பிக்பாஸில் பார்வதியின் முகத்திரையை கிழித்த திவ்யா… வைரலாகும் வீடியோ

கீர்த்தி சுரேஷின் கைவசம் உள்ள புது படங்கள் :

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் VD15 என்ற படத்தில் நடித்துவருகிறார். மேலும் தமிழில் மிஷ்கினுடன் ஒரு படத்திலும், மலையாளத்தில் தோட்டம் என்ற படத்திலும் நடித்துவருகிறார். மேலும் புது படங்களுக்கான கதைகளையும் கேட்டுவருகிறாரா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் எல்லாம் வரும் 2026ம் ஆண்டில் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.