Theri Vs Mankatha: தல – தளபதி ரீ-ரிலீஸ் திருவிழா…. ரீ ரிலீஸில் மங்காத்தா படத்துடன் மோதும் தெறி!
Thala VS Thalapathy Re-Release Festival: தமிழ் சினிமாவில் உச்ச நாயகர்களாக இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார். இவர்கள் இருவரின் ரசிகர்களுக்கே தமிழ் சினிமாவில் போட்டிகள் அதிகம். இந்நிலையில் தெறி படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அஜித் குமாரின் மங்காத்தா படத்துடன் ரிலீஸ் செய்யப்படுவதாக தயாரிப்பாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், அவரின் கடைசி படமாக ஜன நாயகன் (Jana Nayagan) உருவாகியுள்ள நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது. அந்த வகையில் இந்த் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையே மந்தமாக போனது என ரசிகர்கள் பலரும் தெரிவித்து வந்தனர்.அந்த விதத்தில் அட்லீ (Atlee) மற்றும் விஜய் கூட்டணியில் முதல் முறையாக தயாரான படம் தெறி (Theri) ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு இணங்க ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தெறி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய், விஜய் குமார் ஐ.பி.எஸ்.-ஆக இந்த தெறி படம் வரும் 2026 ஜனவரி 23ம் தேதியில் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாம். இதன் ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் நாளை 2026 ஜனவரி 18ம் தேதியில் வெளியாகவுள்ளது.
இதே தேதியில்தான் அஜித் குமாரின் (Ajith Kumar) மங்காத்தா (Mankatha) படமானது ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவித்த நிலையில், தல மற்றும் தளபதி ரீ-ரிலீஸ் திருவிழாவாக இந்த விடுமுறை இருக்கும் இது தற்போது தல மற்றும் தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க: துபாய் கார் ரேஸ் களத்தில் அஜித் குமாரை சந்தித்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா!
தளபதி விஜய்யின் தெறி பட ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
ஜனவரி 23 முதல் உலகமெங்கும் “THERI”
🚨 Tomorrow “TRAILER” release
Thalapathy @actorvijay @Atlee_dir @gvprakash @Samanthaprabhu2 @iamAmyJackson @george_dop #Ruban #ThalapathyVijay #Theri pic.twitter.com/3992KrKD6j
— Kalaippuli S Thanu (@theVcreations) January 17, 2026
மீண்டும் மோதும் தல – தளபதி படம் :
பொதுவாக தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித்திற்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் இவர்கள் இருவரின் படங்கள் ஒன்றுக்கொன்று மோதுவது இயல்புதான். இறுதியாக வாரிசு மற்றும் துணிவு என்ற இரு படங்கள் கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி, இரு படங்களுக்கும் இடையே கடும் பாக்ஸ் ஆபிஸ் மோதல் இருந்தது. அதில் விஜய்யின் வாரிசு படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்புகள் இருந்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் இந்த 2026ம் ஆண்டில் தல மற்றும் தளபதி ரீ-ரிலீஸ் படங்கள் மோதுகிறது.
இதையும் படிங்க: புது படத்தில் இணைந்த கவின் – சாண்டி.. ரசிகர்களிடையே வைரலாகும் அறிவிப்பு வீடியோ!
இது 2026ம் ஆண்டு பெரிய ரீ-ரிலீஸ் மோதல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அஜித் குமாரின் மங்கத்தா படமானது கடந்த 2011ம் ஆண்டில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகியிருந்தது. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில், 2026 ஜனவரி 23ல் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அதைப்போல அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான தெறி 10 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், அதே தேதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ரீ-ரிலீஸ் படங்கள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.