துபாய் கார் ரேஸ் களத்தில் அஜித் குமாரை சந்தித்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா!
Nayanthara And Vignesh Shivan Met Ajith Kumar: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் தற்போது கார் ரேஸ் பயிற்சியில் பிசியாக இருந்துவருகிறார். துபாயில் ரேஸ் தளத்தில் அஜித் குமார் பயிற்சி எடுத்துவந்த நிலையில், அவரை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி சந்தித்துள்ளனர்.
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் சினிமாவையும் கடந்து அவரின் கனவான கார் ரேஸ் (Car Race) பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். இதுவரை பல்வேறு நாடுகளில் நடந்த கார் ரேஸ் போட்டியில் தனது அணியினருடன் கலந்துகொண்டு வெற்றிபெற்றிருக்கிறார். அந்த விதத்தில் கடந்த 2025 டிசம்பர் இறுதியில் மலேசியாவில் நடந்த கார் ரேஸ் போட்டியிலும் தனது அணியுடன் அஜித் குமார் கலந்துகொண்டிருந்தார். இந்த போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், இதில் 4வது இடத்தை அஜித் குமார் அணி பிடித்திருந்தது. இந்த மலேசிய கார் ரேஸின்போது அஜித் குமாரை ரசிகர்கள் முதல் பல்வேறு நடிகர்களும் நேரில் சந்தித்திருந்தார். அந்த வகையில் மலேசிய கார் ரேஸை முடித்த அஜித் குமார் தற்போது துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் (Car race training in Dubai) இருக்கிறார்.
ஆசிய லீ மான்ஸ் போட்டிக்காக தயாராகிவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அஜித் குமாரை தமிழ் சினிமாவின் பிரபலங்களான இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh SivaN) மற்றும் நடிகை நயன்தாரா (Nayanthara) சந்தித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க: கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் குமாரை சந்தித்தது தொடர்பான வீடியோ பதிவு:
#VigneshShivan and #Nayanghara Met #Ajithkumar in Dubai racing circuit..⭐ pic.twitter.com/EnbaDNYGLf
— Laxmi Kanth (@iammoviebuff007) January 17, 2026
நடிகர் அஜித் துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் பிசியாக இருந்துவரும் நிலையில், அவரை நேரில் சென்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து சந்தித்துள்ளனர். அவரை சந்தித்து மட்டுமல்லாமல் அஜித் குமார் அவரின் அணியினரையும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
அஜித் குமாரின் புது பட ஷூட்டிங் எப்போது :
அஜித் குமார் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் AK64 என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதில் அஜித் குமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியால இளம் நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்னும் உறுதியாகவில்லை.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் படம்.. டைட்டில் என்ன தெரியுமா?
இந்த படத்தை அஜித் குமாரே தயாரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் 2026 பிப்ரவரி இறுதியில் தொடங்கும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.