யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது விஜயின் தளபதி கச்சேரி பாடலின் லிரிக்கள் வீடியோ
Jana Nayagan Movie Thalapathy Kacheri Lyric Video | நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் இருந்து முன்னதாக வெளியான தளபதி கச்சேரி பாடலின் லிரிக்கள் வீடியோ யூடியூபில் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இந்த 2026-ம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையை கொண்டாடி இருந்தாலும் தளபதி நடிகர் விஜயின் ரசிகர்களுக்கு மட்டும் இது சோகமான பொங்கல் பண்டிகையாகவே கடந்து இருக்கு. காரணம் கடந்த 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக உறுவாகி உள்ள ஜன நாயகன் படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதன் காரணமாக படத்தின் வெளியீட்டை தள்ளிவைப்பதாக படக்குழு அறிவித்தது. மேலும் சென்சார் சான்றிதல் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பெற படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடியது. ஆனால் வழக்கு விசாரணையும் முடியாமல் தொடர்ந்து தள்ளிப்போன காரணத்தால் படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகாது என்பது உறுதியானது.
ஏற்கெனக்வே இதுதான் நடிகர் விஜயின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகும் படம் என்ற செய்து அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் படமும் வெளியாகத காரணத்தால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து சென்சார் சான்றிதழ் கிடைத்தப் பிறகே படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.




யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது தளபதி கச்சேரி பாடல்:
இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் ஜன நாயகன் படத்தில் இருந்து முன்னதாக வெளியான தளபதி கச்சேரி என்ற பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் பாடலை தளபதி விஜய், அனிருத் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ள நிலையில் பாடலின் வரிகளை அறிவு எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அனிருத் ரவிச்சந்திரன் பாடலுக்கு இசையமைத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… தனுஷின் 54 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியானது சூப்பர் அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan First Single #ThalapathyKatcheri lyrical video has crossed 100M+ views on YouTube — a massive milestone and a true fan-powered celebration#ThalapathyVijay
pic.twitter.com/PRfxpWABW2— Movie Tamil (@_MovieTamil) January 16, 2026
Also Read… இப்போ என் என்ட்ரி… ஹீரோ என்ட்ரி… மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியானது