Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவரா? இணையத்தில் கசிந்தது தகவல்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி ஒளிபரப்பாக உள்ள நிலையில் இந்த சீசனில் வெற்றியாளர் யார் என்பது குறித்து தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவரா? இணையத்தில் கசிந்தது தகவல்
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Jan 2026 10:43 AM IST

தமிழ் சின்னத்திரையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் நிகழ்ச்சி தொடர்ந்து டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கையே பெற்று வந்தது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியபோது பலருக்கு இந்த நிகழ்ச்சி எப்படி செயல்படுகிறது என்பது தெரிந்துகொள்வதற்கே ஆர்வம் அதிகமாக இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களில் இந்த நிகழ்ச்சியில் போக்கு எப்படி இருக்கும் என்பதை மக்கள் புரிந்துகொண்டனர். அதன்பிறகு சீரியல் பார்க்கும் பார்வையாளர்களும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கத் தொடங்கினர். தொடர்ந்து 8 சீசன்களாக ரசிகர்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சியில் 9-வது சீசனாக பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதலாவதாக மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 4 பேர் வைல்கார்ட் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பப்பட்டனர். போட்டியாளர்கள் இடையே கடுமையான போட்டி நிகழ்ந்து வந்த நிலையில் இறுதிப் போட்டிக்கு மொத்தம் 4 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவரா?

அதன்படி முதலாவதாக டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றிப்பெற்ற அரோரா நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வானார். அதனைத் தொடர்ந்து அவருடன் இணைந்து திவ்யா, சபரி மற்றும் விக்ரம் ஆகியோற் இறுதிப் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில் இன்று இறுதிப் போட்டி மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் யார் கோப்பையை வென்று டைட்டில் வின்னராக மாறியுள்ளார் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக திவ்யா தேர்வாகி உள்ளதாக தகவல்கள் கசிந்து வைரலாகி வருகின்றது.

Also Read… காதலர் தினத்தில் மிருணாள் தாக்கூரை திருமணம் செய்யும் தனுஷ்? இணையத்தில் வைரலாகும் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்