AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட திருவிழா எப்போது தொடக்கம்..?

Tiruvarur Thyagaraja Temple Azhi Ther Festival: திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத் திருவிழா 2026 மார்ச் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 2026 மார்ச் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. வேத மந்திரங்கள் மற்றும் மங்கள இசையுடன் 54 அடி உயரக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட திருவிழா எப்போது தொடக்கம்..?
தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட திருவிழாImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 07 Mar 2026 13:52 PM IST

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ஆழித்தேரோட்டத் திருவிழா 2026 மார்ச் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. சைவ சமயத்தின் தலைமை பீடமான இக்கோவிலில், 54 அடி உயரக் கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் மற்றும் மங்கள இசை முழங்க நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். வரும் 2026 மார்ச் 29-ம் தேதி சிகர நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

‘சர்வதோஷ பரிகார தலம்’

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்களால் ‘சர்வதோஷ பரிகார தலம்’ என்றும் போற்றப்படும் மிகமுக்கிய ஆன்மீகத் தலமாகும். இக்கோவிலின் பெருமைகளுள் மிக முக்கியமானது உலகப் புகழ்பெற்ற ‘ஆழித்தேர்’ திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த பிரம்மாண்ட தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான பங்குனி உத்திரத் திருவிழா இன்று முறைப்படி கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. 2026 மார்ச் 6-ம் தேதி மாலை நடைபெற்ற இந்த நிகழ்வு, திருவாரூர் நகரையே விழாக்கோலம் பூணச் செய்துள்ளது.

Also Read: தடைகளை நீக்கி வெற்றி தரும் கணபதி ஹோமம்

வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வு

விழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் மிகுந்த ஆன்மீகச் சிறப்புடன் நடைபெற்றது. தியாகராஜர் கோவிலில் உள்ள 54 அடி உயரக் கொடிமரத்தில், நந்தி உருவம் பொறித்த உற்சவக் கொடி ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க, நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் உள்ளிட்ட மங்கள இசை ஒலிக்க, பக்தி பரவசத்துடன் கொடியேற்றம் நிறைவேறியது. இந்தக் கொடியேற்ற நிகழ்வைக் காண உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து “ஆரூரா… தியாகேசா…” என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இது விழாவின் தொடக்கமே அன்றி, இனி வரும் நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது.

உலகப் புகழ்பெற்ற ஆழித்தேரோட்டம் குறித்த எதிர்பார்ப்பு

இந்த ஆண்டு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் வருகிற 2026 மார்ச் 29-ந்தேதி (29-03-2026) அன்று நடைபெற உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்படும் ஆழித்தேர், நான்கு வீதிகளிலும் அசைந்தாடி வரும் அழகு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதற்காக தற்போதே தேரைத் தயார் செய்யும் பணிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. தேரோட்டத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து விரிவான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றன. கொடியேற்றம் தொடங்கிவிட்டதால், திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது ஆன்மீக மணம் வீசத் தொடங்கியுள்ளது.

Follow Us