Parasakthi OTT Update: சிவகார்த்திகேயனின் பராசக்தி பட ஓடிடி ரிலீஸ் எப்போது? அட இத்தனை வாரங்களுக்கு பிறகா?
Parasakthi Movie OTT Update: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிக பிரம்மாண்ட படமாக கடந்த 2026 ஜனவரி 10ல் வெளியான படம் பராசக்தி. இப்படமானது திரையரங்குகளில் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இப்படமானது எப்போது ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், இது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை பல படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் 25வது திரைப்படமாக கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியான படம்தான் பராசக்தி (Parasakthi). இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongra) இயக்க, சிவகாத்திகேயன் மற்றும் ரவி மோகன் (Ravi Mohan) முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் 1964 ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இதில் ஸ்ரீலீலா (Sreeleela), அதர்வா, ராணா, பேசில் ஜோசப் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது தியையரங்குகளில் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.
இப்படம் வெளியாகி 7 நாட்களை கடந்த நிலையில், இன்னும் ரூ 100 கோடி வசூலை எட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கிறது. திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கவரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் நிலையில், விரைவில் ஓடிடியில் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது.




இதையும் படிங்க: எனது அடுத்த படங்கள் இப்படித்தான் இருக்கும் – ரசிகர்களுக்கு ஹேப்பி செய்தி சொன்ன சிவகார்த்திகேயன்!
பராசக்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது இருக்கும் :
சிவகார்த்திகேயனின் பராசக்தி படமானது வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகும் என முன்னதாக தகவல்கள் வெளியாகிவந்தது. அந்த வகையில் இப்படத்திற்கு திரையரங்குகளில் பெரிதாக வரவேற்புகளும் இல்லை என்ற நிலையில், விரைவில் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும்- ரசிகருக்கு தக்க பதிலளித்த சூரி!
அதன்படி இப்படம் 2026 பிப்ரவரி மாதத்தின் 2வது வாரத்தில் ஜீ5 ஓடிடியில் வெளியாக வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதாம்.இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி ரிலீஸ் ஜீ5 நிறுவனமானது சுமார் ரூ 52 கோடிகளுக்கு வங்கியுள்ளதாம்.
பராசக்தி பட கேமியோக்கள் குறித்து படக்குழு வெளியிட்ட புது புரோமோ பதிவு :
When they came on screen, they delivered goosebumps 🔥#Parasakthi – running successfully in theatres now. Witness it on the big screens!#ParasakthiPongal@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_… pic.twitter.com/RRTHPeSRmV
— DawnPictures (@DawnPicturesOff) January 17, 2026
இந்த படமானது சுமார் ரூ 120 கோடிகளுக்கு மேல் பொருட்செலவில் தயாராகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் மொத்தமாக சுமார் ரூ 65 கோடிகள் கிட்ட இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பாடல்கள் முழுவதும் மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பல்வேறு ப்ரோமோஷன் செய்தும் இப்படத்திற்கு மக்களிடையே நெகட்டிவ் விமர்சனங்களே எழுந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.