Sivakarthikeyan: எனது அடுத்த படங்கள் இப்படித்தான் இருக்கும் – ரசிகர்களுக்கு ஹேப்பி செய்தி சொன்ன சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan About His Next Movies Genre : நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இறுதியாக பராசக்தி படமானது வெளியாகியிருந்தது. இப்படத்தை அடுத்தாக புது படங்களில் இவர் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அந்த திரைப்படங்கள் எவ்வாறு இருக்கும் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தமிழ் மக்களிடையே தொகுப்பாளராக பிரபலமாகி தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்து அசத்தி வருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் படங்கள் தயாராகி வருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக் வெளியான படம் பராசக்தி (Parasakthi). இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் (Ravi Mohan) இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது 1964ல் நடந்த இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் வெளியான படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா (Sreeleela) நடித்திருந்தார்.
இப்படம் 2026 ஜனவரி 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான நிலையில், மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், தனது அடுத்த படங்கள் எப்படிப்பட்ட ஜானரில் இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: சாய் பல்லவியின் இந்தி அறிமுகம்… ‘ஏக் தின்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!
தனது புது படங்களின் ஜானர் குறித்து வெளிப்படையாக பேசிய சிவகார்த்திகேயன் :
அந்த நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயன், “அதில் நான் ரொம்பவே தெளிவாக இருக்கிறேன். எனது அடுத்த படங்கள் முழுவதும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட ஜானரில்தான் இருக்கும். ஏனென்றால், பராசக்தி போன்ற கொஞ்சம் வெயிட்டான டைட்டில் வைத்திருக்கும் படத்தில் நடிப்பதற்கு கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. ஏனென்றால் அது கொஞ்சம் ஹெவியான கதாபாத்திரம் கொண்டிருக்கும். அதனால் எனது அடுத்த படங்கள் முழுவதும் பொழுதுபோக்கு அம்சம் சார்ந்த திரைப்படமாகத்தான் இருக்கும்” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தனது அடுத்த படங்கள் குறித்து வெளிப்படையாக சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ :
#Sivakarthikeyan: “I’m very clear that, Whatever I do next film, it will be a full fledged entertainer🤩, because I have done heavy characters continuously (Amaran, Madharaasi & Parasakthi)🌟”
So a complete entertainer loading in #VenkatPrabhu direction🔥pic.twitter.com/1F8LVzaFY7
— AmuthaBharathi (@CinemaWithAB) January 15, 2026
பராசக்தி படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் புது படத்தில் இணைகிறார். இப்படம் ஒரு அறிவியல் புனைகதைகளை கொண்ட திரைப்படமாக தயாராகவுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளாராம்.
இதையும் படிங்க: ஹீரோவாக அறிமுகமான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்… ரசிகர்களிடையே வைரலாகும் புது பட கிளிம்ப்ஸ்!
ஏற்கனவே இந்த ஜோடி கடந்த 2019ல் வெளியான ஹீரோ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற நிலையில், அனிருத் இசையமைப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இந்த 2026 ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் ஆரம்பமாகவுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.